சூப்பர் ஸ்டாரை முந்தி இந்தியாவில் தளபதி விஜய் முதலிடம்.? தளபதி விஜய் ரசிகர்கள் காமெடி.. BARC நிறுவனம் உண்மையை வெளியிட்டது !
திரைப்பட வசூல்… யூடியூப் சாதனை போல டிவி சேனல்கள்க்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிகம் பேரால் பார்க்கப்படும் நிகழ்ச்சிக்கு TRP ரேட்டிங் கணக்கிடப்படுகிறது.
எந்த டிவி சேனலில் எந்த நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்க்கின்றனர் என்பதை கணக்கிட்டு ஒவ்வொரு வாரமும் முடிவுகளை அறிவித்து வருகிறது பார்க் (BARC) நிறுவனம்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட படம் தளபதி விஜய்யின் படம் என்றும் 117.9 மில்லியன் பார்வைகளை பெற்று தளபதி விஜய் முதல் இடம் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியானது.
அதில், இரண்டாவது இடத்தில் நடிகர் இயக்குநர் நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் 76.2 மில்லியன் மூன்றாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 65.8 மில்லியன் நான்காவது இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் 58.8 மில்லியன் ஐந்தாவது இடத்தில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் 56.9 மில்லியன் என புள்ளி விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
தனக்கு பிடித்த நடிகரை முதலிடத்தில் அவரது ரசிகர்கள் வைப்பார்கள்.. எனவே இதை தளபதி விஜய் ரசிகர்கள் செய்திருப்பார்கள் என கூறப்படுகிறது.
ஆனால் அந்த புள்ளி விவரம் போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளது பார்க் நிறுவனம்.
இந்த தவறான தகவலை விளம்பரப்படுத்த தங்கள் நிறுவனத்தின் அடையாளம் (LOGO) தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
It has come to our attention that people are posting false data using BARC India's logo. This is a serious breach and an offence. Please refer to data only published by BARC India and republished or shared by others using the official data.#BARCIndia #WhatIndiaWatched pic.twitter.com/HloK4z4TcB
— BARCIndia (@BARCIndia) July 20, 2020











