சூப்பர் ஸ்டாரை முழுவதுமாக காப்பியடிக்கும் தளபதி எப்படியாச்சும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் நமக்கு வரணும் ஆசை.!

சென்னை 04 டிசம்பர் 2022 சூப்பர் ஸ்டாரை முழுவதுமாக காப்பியடிக்கும் தளபதி எப்படியாச்சும் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் நமக்கு வரணும் ஆசை.!

தமிழ் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய தனித்துவமான ஸ்டைலினால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டு தனக்கென ரசிகர்கள் ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில் ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை தளபதி, சூப்பர் ஸ்டார் மாதிரியே காப்பி அடிக்கிறார் என்ற செய்திகள் அடிக்கடி இணையதளத்தில் வந்து கொண்டு இருக்கிறது..

அதே போல தளபதி விஜயும் செய்து வருகிறார்.

தற்போது தளபதி விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படத்தை நடித்து முடித்து அந்த திரைப்படத்தை பொங்கலுக்கு தனது ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறார்.

இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.

இதனால் தளபதி 67 திரைப்படத்தின் பூஜை வரும் நாளை 5-ஆம் தேதி ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெறுகிறது.

தளபதி விஜய் ஆரம்ப காலத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து இருப்பார் .

ஆனால் வளர்ந்த பிறகு பல வருடங்களாக அதை செய்வது இல்லை.

எதற்காக திடீரென தளபதி 67 திரைப்படத்தின் பூஜையை ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோயில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இவருடைய இந்த திடீர் மாற்றத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிங அன்று முதல் இன்று வரை ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து விநாயகரிடம் ஒரு டயலாக் பேசி திரைப்படத்தை துவங்குவார்.

அது அவருடைய ஸ்டைல். இப்பொழுது இதையும் தளபதி விஜய் காப்பி அடிப்பதால் திரைப்பட உலகில் உள்ள பிரபலங்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஏற்கனவே தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத திரைப்படமாகவே அமைந்துள்ளது.

அதற்கு பின்னர் வாரிசு திரைப்படமும் பக்கா சென்டிமெண்ட் திரைப்படம் என்பதால், தளபதி 67 திரைப்படத்தைதான் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதால் அதை சிறப்பாக துவங்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலை பின்பற்றியுள்ளார் நடிகர் தளபதி விஜய்.