சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!*

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 167வது திரைப்படமான ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று வெளியாக உள்ளது. இதற்கிடையே கோவாவில் 50வது சர்வதேச திரைப்படவிழா வருகின்ற நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.