சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட டைட்டிலுக்காக மோதும் தனுஷ் & ஜிவி. பிரகாஷ்; இதுக்கு என்டே இல்லையா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தலைப்புகளை தங்கள் படங்களுக்கு வைப்பதை கோலிவுட் ஹீரோக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதில் முக்கியமாக தனுஷ் மற்றும் ஜிவி. பிரகாஷ் இருவருக்குள்ளே போட்டியே நடக்கிறது எனலாம்.

மாப்பிள்ளை, பொல்லாதவன், தங்கமகன், படிக்காதவன் உள்ளிட்ட பல படத்தலைப்புகளை வைத்துக் கொண்டார் தனுஷ்.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு (பாட்ஷா பன்ச்), குப்பத்து ராஜா உள்ளிட்ட படத்தலைப்புகளை வைத்துக் கொண்டார் ஜிவி. பிரகாஷ்.

தற்போது எழில் இயக்கத்தில் இவர் நடித்து வரும் படத்திற்கு ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தலைப்பை வைத்துள்ளனர்.

இதுவும் ரஜினி படத்தலைப்பு தான் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.