சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு விருதுகளை வழங்குகிறார் தமிழக முதல்வர்*

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் 2019ம் ஆண்டு வெளியான ‘எல்.கே.ஜி’, ‘பப்பி’ மற்றும் ‘கோமாளி’ ஆகிய திரைப்படங்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் வெற்றி விழா’ ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் வெற்றிக்காக உழைத்திட்ட திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விருது வழங்கி சிறப்பிக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகின்ற 24ம் தேதி மாலை 6 மணியளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது.