டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நடிகை கஸ்தூரி.

கொரோனா வைரஸ் நோய் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் கடந்த 50 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

ஒரு பக்கம் கொரோனாவின் தொற்று அதிகளவில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு உத்தரவு தொடர்பான சில கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியது.

தமிழக அரசும் இது போன்று சில தளர்வுகளை கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில் குடிமகன்கள் அதிகம் எதிர்பார்த்த டாஸ்மாக் பார்களை திறக்க வாய்ப்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி !.
@CMOTamilNadu @PThangamanioffl

என பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி.

 

error: Content is protected !!