கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ரூபாய் 15 ஆயிரம் வைத்து கொடுத்தது உண்மையா? – பாலிவுட் நடிகர் அமீர்கான் விளக்கம் அளித்துள்ளார்.

கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ரூபாய் 15 ஆயிரம் வைத்து பாலிவுட் நடிகர் அமீர்கான் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு கொடுத்ததாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவில் பாதிக்கப்பட்டோருக்கு பாலிவுட் நடிகர்கள் சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், பாலிவுட் நடிகைகள் கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி திரைப்பட உலகை சார்ந்த நடிகர்-நடிகைகள் உதவி புரிந்து வருகிறார்கள்.

இதனிடையே பாலிவுட் நடிகர் அமீர்கான். ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் ரூபாய்15 ஆயிரம் பணம் வைத்து நூதனமான முறையில் நிவாரணம் வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் பரவிய வண்ணம் உள்ளது.

இதுகுறித்து எந்த வித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்து வந்த பாலிவுட் நடிகர் அமீர்கான். தற்போது டுவிட்டரில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

அதில், “கோதுமை மாவு பாக்கெட்டுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதன் நானல்ல. அது முற்றிலும் போலியான தகவலாக இருக்கலாம்.

அல்லது அதை செய்த ராபின் ஹுட் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள கூடாது. என விருப்பப்பட்டிருப்பார்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.  பாலிவுட் நடிகர் அமீர்கான்

https://twitter.com/aamir_khan/status/1257165603678240768?s=19

 

error: Content is protected !!