தல அஜித்குமார் தளபதி விஜய் ரசிகர்களை கண்டித்த நடிகை கஸ்தூரி
நடிகை கஸ்தூரி ட்விட்டரில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருப்பவர்.
நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு இவரின் கருத்துக்கள் அவ்வப்போது வந்து ட்விட்டரில் விழும்.
அண்மையில் தளபதி நடிகர் விஜய் இறந்த தேதி என அஜித்குமார் ரசிகர்கள் மற்றும் அஜித்குமாருக்கு பாடைக்கட்டு என தளபதி விஜய் ரசிகர்களும் ட்ரெண்ட்டிங் செய்தனர்.
கொரோனாவில் கொடிய காலத்திலும் இவர்கள் திருந்தவில்லை என நடுநிலையான நெட்டிசன்களே கண்டித்தனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த மோதல் தொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில்…
அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை;
ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு என்று பதிவு செய்துள்ளார்.
என கடுமையாக பதிவிட்டுள்ளார்.
அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க.
வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம் .
ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்.Ignore negativity.
வாழு வாழ விடு.— Kasturi (@KasthuriShankar) April 18, 2020











