தளபதியுடன் மோதலுக்கு தயாரான மக்கள் செல்வன்
நடிகர் விஜய்ந தளபதி 64 படத்தின் சூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. இதில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.
இதே போல இன்னொரு மோதலிலும் தற்போது இறங்கியிருக்கிறார் விஜய்சேதுபதி.
அதாவது விஜய் நடித்துள்ள பிகில் படம் இந்த மாதம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதே நாளில் விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் வெளியாகிறது என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுகு முன் அக்டோபர் முதல் வாரம் அல்லது 2வது வாரம் வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது பிகில் படத்துடன் மோதலை உறுதி செய்துள்ளனர்.
இத்துடன் கார்த்தி நடித்துள்ள கைதி படமும் தீபாவளிக்கு வருவது குறிப்பிடத்தக்கது.











