தளபதி விஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம் – தொலைக்காட்சி பிரபலம்*

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ’தளபதி 64’ படத்தில் தற்போது மேலும் ஒரு தொலைக்காட்சி நடிகையான சௌந்தர்யா நந்தகுமார் இணைந்துள்ளார்.

இந்தப் படம் குறித்து சௌந்தர்யா கூறுகையில், தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் தன்னுடைய நடிப்பை பார்த்து லோகேஷ் கனகராஜ் தன்னை அழைத்ததாகவும், அவருடைய அழைப்பு தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதை கேட்டு ஆச்சரியமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.