தளபதி 65 படத்தின் இயக்குனர் இவரா..?
தளபதி 65 படத்தின் இயக்குனர் இவரா..???

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடித்து வரும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதன் அடுத்தடுத்த அப்டேட்டுகள் கோலிவுட்டையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குனர் யார் என்ற கேள்வி தான் தற்போதைய கோலிவுட்டின் பரபரப்பாக உள்ளது
கனா படத்தினை இயக்கிய அருண்ராஜா காமராஜ் தான் தளபதி 65 படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்படாத அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது,. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.











