துநேரி திரை விமர்சனம் ரேட்டிங் –2.5 /5.
நடிகர் நடிகைகள் – ஜான் விஜய், நவீன் கார்த்திக், மியாஶ்ரீ, அஸ்மிதா, நகுல், அபிஜித், சாத்விகா, மரியா வசீகரம், சந்தோஷ், மணிகண்டன், கிருஷ்ண குமார், மற்றும் பலர்.
இயக்கம் – சுனில் டிக்சன்.
ஒளிப்பதிவு – கலேஷ் மற்றும் ஆலன்.
படத்தொகுப்பு – ஃபிடல் காஸ்ட்ரோ.
இசை – கலையரசன்.
தயாரிப்பு – சரவுண்ட் லைட் என்டர்டைன்மென்ட்.
ரேட்டிங் –2.5 /5
தமிழ் திரைப்பட உலகில் எவ்வளவோ திகில் திரைப்படங்களும் பேய் திரைப்படங்களும் வந்திருக்கிறது.
அந்த வரிசையில் இந்த தூநேரி படமும் சேர்ந்திருக்கிறது.
வழக்கமான பேய் திரைப்பட வரிசையில் இந்த லிரைப்படம் அமைந்தாலும், வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர் சுனில் டிக்ஸன்.
சென்னையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் நவீன் கார்த்திக் மற்றும்
மனைவி, மகள், மகனுடன் வாழும் இன்ஸ்பெக்டர் கதாநாயகன் நிவின் கார்த்திக் சென்னையிலிருந்து காட்டுப் பகுதியில் உள்ள கிராமத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.
அந்தக் காட்டுப் பகுதி கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் சார்ஜ் எடுப்பதற்கு முன் கதாநாயகன் நிவின் கார்த்திக் குடும்பத்தினரை தனி வீட்டில் குடியேற்றுகிறார்.
கதாநாயகன் நவீன் கார்த்திக் குடியேறியிருக்கும் வீட்டுக்கு எதிரிலேயே சுடுகாடு இருப்பதால், குழந்தைகள் பயப்படுகின்றனர்.
அதே சமயம் ஊரில் அடிக்கடி கொலை சம்பவங்கள் நடக்கிறது.
கதாநாயகன் நிவின் கார்த்திக் குடும்பித்தினரையும் அமானுஷ்ய சக்தி அடிக்கடி தொந்தரவு செய்கிறது.
இறுதியில் ஊரில் இருப்பவர்களை கொலை செய்வது யார்? கதாநாயகன் நிவின் கார்த்திக் குடும்பத்தினரை தொந்தரவு செய்யும் அமானுஷ்ய சக்தி எது? என்பதுதான் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் நிவின் கார்த்திக் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வருகிறார்.
தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கருப்பசாமியாக வரும் ஜான் விஜய் வழக்கமான நடிப்பில் இருந்து மாறி வித்தியாசமான நடிப்பை வழங்கி இருக்கிறார்.
தன்னை திட்டுபவர்களை அடிப்பதும், பாசத்தால் உருகுவதுமாக மனதை கவர்ந்திருக்கிறார் ஜான் விஜய்.
தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் தெள்ளத்தெளிவாக கதாபாத்திரமாக உருமாறி மிக அருமையாக நடித்திருக்கிறார் ஜான் விஜய்.
கதாநாயகன் நிவின் கார்த்திக் மனைவியாக வரும் மியாஸ்ரீ, அன்பு, பயம், மிரட்டல் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து மிக அருமையாக நடித்திருக்கிறார்.
குழந்தைகளாக நடித்திருக்கும் அஷ்மிதா, நகுல், அபிஜித், மூவரின் நடிப்பும் எதார்த்தமாக அமைந்திருக்கிறது.
சொல்ல வந்த கதையை தெள்ள தெளிவாக சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுனில் டிக்சன்.
திகில் திரைப்படத்திற்கு ஏற்றவாறு இசையமைத்து இருக்கிறார்.
பின்னணி இசையும் மிக அருமையாக இசை அமைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கலையரசன்.
கலேஷ் மற்றும் ஆலன். ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘தூநேரி’ திரைப்படம் திகில் கம்மி.