தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.

தெலுங்கு திரைப்பட உலகில் காமெடியனாகவும் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர்ஜெயபிரகாஷ் ரெட்டி அவருக்கு வயது 75.

இயக்குநர் மகாராஜன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் ஆஞ்சநேயா திரைப்படத்தின் மூலம் வில்லனாக தமிழ் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனவர் தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி.

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஆறு திரைப்படத்தின் மூலம் ரெட்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்தார். .

அதன் பிறகு இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் திரைப்படத்தில் தெலுங்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி நடித்த கதாபாத்திரம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.

ஆனால் அதற்குப் பிறகு தெலுங்கு நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி தமிழ் திரைப்படங்களில் அவ்வளவு நடிக்கவில்லை.

இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார்.

ஆந்திரா உள்ள கர்னூல் மாவட்டத்தில் பிறந்தவர் தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி இவருடைய வாழ்க்கை மேடை நாடகங்களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

அதன் பின்னர் தெலுங்கு திரைப்பட உலகில் அனைத்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறார்.

இவர் முதலில் நடிகராக தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் வெளிவந்த பிரம்ம புத்ருடு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.

இவர் கடைசியாக நடிகர் மகேஷ் பாபுவுடன் சரீலேரு நீக்கெவரு என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி ராம் சரன் ஜூனியர் என்டிஆர் மகேஷ் பாபு அனைத்து கதாநாயகிகளை படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய இழப்பு தெலுங்கு திரைப்பட உலகினர் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.