நடிகர் ஜார்ஜ் மரியானின் மகன் பிரிட்டோ தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான் அவரது மகன் சினிமாவில் அறிமுகமாகிறார்.
சைவம் கைதி தடம் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஜார்ஜ் மரியான்.
சின்ன வேடம்தானே என்றாலும் அதில் தனது நடிப்பை முத்திரையை நிச்சயம் பதிவு செய்துவிடுவார் இவர்.
இவரைத் தொடர்ந்து தற்போது இவரது மகன் பிரிட்டோ என்பவரும் சினிமாவில் அறிமுகமாகிறார்.
தூங்கா கண்கள் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.
கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரிக்கின்றன.
இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு முன் நடந்த கதை தான் இது
த வினு என்பவர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் தனது தந்தை ஜார்ஜ் மரியான் நடிகர் களவாணி துரை சுதாகர் நீக்கோஷ் கந்தசாமி காஞ்சனா ரமேஷ் டாக்டர் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்
கதாநாயகிகளாக அப்ஷரா ரேஷ்மா ஆகியோர் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமாகிறார்கள்.
இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவு இமயவன் செய்ய இளங்கோ கலைவாணன் இசையமைக்கிறார்.
பாடல்கள்: நிமேஷ், படத்தொகுப்பு ஏ.எல்.ரமேஷ், சண்டைப்பயிற்சி திரில்லர் முமேஷ்











