Tuesday, May 26
Shadow

நடிகர் தனுஷ் – இயக்குனர் செல்வராகவன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் ⁉*

நடிகர் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தொடர்ச்சியாக மூன்று படங்களை தயாரிக்களார் என்பது தெரிந்ததே. அதன் அதில் முதல் படமான ’அசுரன்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக உள்ளது. இரண்டாவது படத்தை ’பரியேறும் பெருமாள்’ இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நடிகர் தனுஷ்-தாணு இணையும் மூன்றாவது படத்தை இயக்குனர் செல்வராகவன் இயக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில், கிட்டத்தட்ட இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ’மயக்கமென்ன’ படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ்-இயக்குனர் செல்வராகவன் மீண்டும் இந்த படத்தில் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது 

இந்நிலையில் இந்த படத்திற்கு சீன் ரோல்டான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தனுஷ் நடித்த ‘பா.பாண்டி’ மற்றும் ’வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.