Friday, July 10
Shadow

நடிகர் யோகி பாபு நடிக்கும் “காக்டெய்ல்” திரைப்படமும் ஜூலை 10ம் தேதி ஒடிடி இனையத்தில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இயக்குநர் விஜய முருகன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கும் திரைப்படம் “காக்டெய்ல்” இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் வேலுடன் கடவுள் முருகன் கெட்டப்பில் நடிகர் யோகி பாபு போஸ் கொடுத்தார்.

இந்த காக்டெய்ல்” திரைப்படத்தின்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே இந்த திரைபபடக் குழுவினர் எதிர்பார்த்த அளவு மிக பெரிய சர்ச்சையை கிளப்பியது.

அதே சமயம் தமிழ்க்கடவுள் முருகன் கெட்டப்பில் உள்ள நடிகர் யோகிபாபு- தோற்றத்துக்கு டீம் விளக்கம் குடுத்தாலும் திரைப்படத்திற்கு காக்டெய்ல் என மதுவின் பெயரை வைத்திருப்பதும் இன்னும் சர்ச்சை அதிகமானது.

அப்படி ஓரிரு நாள் ட்ரெண்டிங்-கில் இருந்த இந்த திரைப்படம் வரும் ஜூலை 10ல் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்பெல்லாம் இந்த மது சர்ச்சையைக் கிளப்பும் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் முற்றுகைப் போராட்டம் செய்யப்போவதாக கூறுவார்கள்.

ஆனா இப்படி ஒடிடி-யில் வெளியாகும் பிட்டு படங்கள்
தொடங்கி இந்து கடவுள்களை கிண்டல் செய்யும் திரைப்படங்களுக்கு முற்றுகை போராட்டம் நடத்த
எதிர்ப்புகனை தெரிவிக்க புதிய வழி ஒன்றை தேடிக் கொண்டிருக்கின்றனர்.