நடிகர் அருண்பாண்டியன் – நடிகை கீர்த்தி பாண்டியன் நடிக்கும் ‘அன்பிற்கினியாள்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சென்னை 26 பிப்ரவரி 2021

மலையாள திரைப்பட உலகில் இயக்குநர் மதுக்குட்டி சேவியர் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற திரைப்படம் ஹெலன்.

அப்பா மகள் பாச உறவை மையமாக வைத்து தயாராகி இருந்தது.

இந்த திரைப்படம் தமிழில் ‘அன்பிற்கினியாள்’ என பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டு காலம் தமிழ் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நடிகர் அருண் பாண்டியன்.

இந்த அன்பிற்கினியாள்
திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

அவருடைய மகள் நடிகை கீர்த்தி பாண்டியன் ஹெலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த அன்பிற்கினியாள்
திரைப்படத்தை இயக்குநர் கோகுல் இயக்கி உள்ளார்.

இவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா போன்ற திரைப்படங்களை இயக்கி மிகவும் பிரபலமானவர்.

இந்த நிலையில் அன்பிற்கினியாள் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் 5ந் தேதி இந்த தரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அன்பிற்கினியாள்
திரைப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கி உள்ளது.

இந்த ‘அன்பிற்கினியாள்’
திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் அவர்கள் வெளியிடுகிறார்கள்.

பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்து வருவதோடு தரமான திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் என்ற பெயர் எடுத்துள்ள சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் எதிர்ப்பார்ப்பு ஏற்படுவதுண்டு.

அந்த வகையில், இந்த ‘அன்பிற்கினியாள்’  திரைப்படமும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.