நடுவன் திரை விமர்சனம். ரேட்டிங் –3./5

நடிகர் நடிகைகள் – பரத் நிவாஸ், கோகுல் ஆனந்த், அபர்ணா வினோத், பேபி ஆரத்யா, தர்மராஜ் மாணிக்கம், அருவி பாலா, சுபர்ணன், யோகி ஜெபி, தாசரதி, சுரேஷ் ராஜ், மதுசூதனன், வில்வா சக்கரவர்த்தி, ஜெயபாலன் கே, ஜார்ஜ் மரியான்,
மற்றும் பலர்.

தயாரிப்பு – கியு என்டர்டைன்மென்ட்.

இயக்கம் – ஷாரங்

ஒளிப்பதிவு – யுவா.

படத்தொகுப்பு – சன்னி சவுரவ்.

இசை – தரண் குமார்.

ஒடிடி சோனி லைவ் திரைப்படம் வெளியான தேதி – 24 செப்டம்பர் 2021

ரேட்டிங் –3./5

ஒவ்வொரு மனிதர்களுக்கும் ஒரு முகம் மட்டுமல்ல இன்னொரு முகமும் இருக்கிறது.

கதாநாயகன் பரத் நிவாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த நடுவன் திரைப்படம் OTT தளத்தில் 24ஆம் தேதி வெளிவந்துள்ளது.

கள்ளக்காதல் திரைப்படங்கள் என்றால் பாக்யராஜ் நடித்த சின்ன வீடு திரைப்படத்தைப்போல் நகைச்சுவையாக சொல்லியிருக்கலாம்.

கொடைக்கானலில் கதாநாயகன் பரத் நிவாஸூம் அவரது உயிர் நண்பர் கோகுல் ஆனந்தும் இருவரும் சேர்ந்து தேயிலை தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார்கள்.

கதாநாயகன் பரத் நிவாஸ்தான் தேயிலை தொழிற்சாலை இருக்கும் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்கிறார்.

ஆனால் கோகுல் ஆனந்த் தேயிலை தொழிற்சாலையில் ஒரு முழு நேர குடிகாரர் போல இருக்கிறார்.

கதாநாயகன் பரத் நிவாஸ்க்கு அழகான ஒரு மனைவி, அன்பான ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.

நண்பன் கதாநாயகன் பரத் நிவாஸின் மனைவி கதாநாயகி அபர்ணா வினோத்தும், கோகுல் ஆனந்தும் கள்ளக் காதலர்களாக இருக்கிறார்கள்.

தனது மனைவி தனது உயிர் நண்பருடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு என்னை ஏமாற்றி வருகின்றனர்.

தனதுஎ கதாநாயகன் பரத் நிவாஸ் வீட்டிற்கு வந்து தங்கி அவரது தேயிலை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் உறவுக்கார இளைஞர் அருவி பாலா.

கதாநாயகன் பரத் நிவாஸ் தனது தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் அருவி பாலாவிடம் தனது வீட்டின் சாவியை கொடுத்து வீட்டிற்கு சென்று ஒரு பைலில் உள்ளது என்று கூறி அதை எடுத்து வரச் சொல்கிறார்.

தனது முதலாளியின் வீட்டிற்கு வந்த தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் அருவி பாலா

தனது முதலாளியின் கதாநாயகன் பரத் நிவாஸின் மனைவி கதாநாயகி அபர்ணா வினோத்தும், முதலாளியின் நண்பர் கோகுல் ஆனந்தும் அவர்கள் இருவரும் கட்டிலில் இருக்கும் நிலையை
பார்த்து விடுகிறார்.

அருவி பாலாவை கோகுல் ஆனந்த் மிரட்டி வைக்கிறார்.

கதாநாயகன் பரத் நிவாஸிடம் விசுவாசமாக இருக்கும் அருவி பாலா கள்ளக் காதல் விவகாரத்தை தனது முதலாளி கதாநாயகன் பரத் நிவாஸிடம் சொன்னாரா.? சொல்லவில்லையா.?
என்பதுதான் இநத நடுவன் திரைப்படத்தின் மீதிக் கதை.

தேயிலை தொழிற்சாலை முதலாளியாக பரத் நிவாஸ் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

தனது தேயிலை தொழிற்சாலையை
கதி என கிடக்கும் கனகச்சிதமான கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறார் கதாநாயகன் பரத் நிவாஸ்.

எப்போதோ ஒரு முறை திக்கிப் பேசும் கதாபாத்திரத்தை ஏன் கதாநாயகன் பரத் நிவாஸ்க்கு வடிவமைத்தார் என தெரியவில்லை இயக்குனர் ஷாரங்.

தொழிற்சாலையே கதி என இருக்கிறார் கதாநாயகன் பரத் நிவாஸ்.

அதனால், மனைவியின் கள்ளக் காதல் பற்றிக் கூட அவருக்குத் தெரியவில்லை.

அவ்வளவு அப்பாவியான கதாபாத்திரம் அவருக்கு.

இந்த நடுவன் திரைப்படத்தில் கதாநாயகன் பரத் நிவாஸ் அப்பாவி முதலாளியாக நடித்து பின்பு விஸ்வரூபம் எடுக்கிறார்.

கதாநாயகன் பரத் நிவாஸின் மனைவியாக, ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாக கதாநாயகி அபர்ணா வினோத். அதிகமான குளோசப் காட்சிகள் கூட இவருக்கு இல்லை.

அதனால், நம் மனதில் அவரது கதாபாத்திரம் சரியாகப் பதியவில்லை.

கதாநாயகன் பரத் நிவாஸின் மனைவியாக, நடித்து இருக்கும்.

கதாநாயகி அபர்ணா வினோத் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளார்.

கதாநாயகன் பரத் நிவாஸின் நண்பராக நடித்துள்ள கோகுல் ஆனந்த், குடிகாரன் கள்ளக் காதலன் என வில்லன் வேடத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

ஆனால், கோகுல் ஆனந்த் மனதில் பதிந்துவிடுகிறார்.

முழு நேர குடிகாரர், புகை பிடிப்பவர், கள்ளக் காதலர் என ஒட்டு மொத்த கெட்டவன் ஏரியாவை சரியாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார் கோகுல் ஆனந்த்.

தமிழ் திரைப்பட உலகிற்கு இளம் வில்லன்கள் இருக்கும் பஞ்சத்தை இவரால் கண்டிப்பாக தீர்க்க முடியும்.

கதாநாயகன் பரத் நிவாஸ் வீட்டிற்கு வந்து தங்கியிருந்து அவரது தேயிலை தொழிற்சாலையில் வேலை பார்க்கும் இளைஞராக அருவி பாலா.

தேயிலை தொழிற்சாலையில் உள்ள சில நண்பர்களுடன் சேர்ந்து
அருவி பாலா செய்யக் கூடாத விஷயங்களைச் செய்கிறார்

அருவி பாலாவின் நட்பு கேடில் முடியும் என்பதற்கு இவரது கதாபாத்திரம் சிறந்த உதாரணம்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் இப்படியான நண்பர்களிடம் சிக்கி, குடி, புகை என தங்கள் வாழ்க்கையை சீரழித்துக் கொள்கிறார்கள்.

இதை திரைப்படம் பார்க்கவும் நாம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது,

நடுவன் திரைப்படத்தில் இளைஞர்கள் சீரழிகிறார்கள் என்று வசனத்திலாவது சொல்லிருக்கலாம்.

அருவி பாலாவுடன் சேர்ந்து கெட்டுப் போகும் கதாபாத்திரத்தில் நடித்த நண்பர்கள் அனைவரும் கொஞ்ச காட்சிகள் வந்தாலும் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

கதாநாயகன் பரத் நிவாஸ் கோகுல் ஆனந்த் உடன் பழகுவதற்கு எந்த ஒரு காரணத்தையும் சரியாகச் சொல்லவில்லை.

ஆனால் அந்த காரணத்தை ஒரு வசனத்தில் சொல்லிவிட்டார்கள்

இயக்குனர் ஷாரங் கதைக்கு தகுந்தவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்துள்ள விதம் மிகவும் அருமை.

ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, கதாநாயகி அபர்ணா வினோத் கோகுல் ஆனந்த், கள்ளக் காதல் விவகாரம் தெரிய வந்த பிறகுதான் திரைப்படத்தின் வேகம் கூடுகிறது.

மக்கள் பலரும் தங்களது உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நடுவன் திரைப்படத்தின் கதையை மிக பரபரப்பான திரில்லராக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ஷாரங்.

இதை இன்னும் திரைக்கதையில் மிகவும் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

ஹாரர் திரைப்படங்களுக்கும்
திரில்லர் திரைப்படங்களுக்குப் பின்னணி இசைதான் பக்கபலமாக இருக்க வேண்டும்.

இந்த மாதிரியான எமோஷனல் த்ரில்லர் திரைப்படங்களுக்குப் இசைதான் பக்கபலமாக இருக்க வேண்டும்.

அதை செய்யத் தவறியிருக்கிறார் இசையமைப்பாளர் தரண் குமார்.

கொடைக்கானல்தான் கதைக்களம் என்றாலும் பரத் நிவாஸ் வீடு, கம்பெனி ஆகியவற்றில்தான் கதை அதிகம் நகர்கிறது.

அதில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா.

மக்கள் பலரும் தங்கள் உண்மை முகங்களை மறைத்து வேறொரு முகத்தைக் காட்டித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

உடன் இருக்கும் மனைவியும், கூடவே வரும் உயிர் நண்பனும், உதவி செய்ய அழைத்து வந்த உறவும் இப்படித்தான் இருக்கிறது.

இந்த நடுவன் திரைப்படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் முகமூடி மனிதர்கள்தான்.

இதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் நடுவன் திரைப்படம் பார்க்கலாம்.