இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

நடிகர் நடிகைகள் – மித்துன் மாணிக்கம், ரம்யா பாண்டியன், வாணி போஜன், வடிவேல் முருகன், லட்சுமி, . மனோஜ் தாஸ், . செல்வேந்திரன், பருதி எ.ஏஸ் சதீஷ்குமார் ஏ எஸ்
மற்றும் பலர்.
தயாரிப்பு – நடிகர் சூர்யா & நடிகர் ஜோதிகா
.2டி என்டர்டெயின்மென்ட்.
இயக்கம் – அரசில் மூர்த்தி.
ஒளிப்பதிவு – சுகுமார் எம்.
படத்தொகுப்பு – சிவ சரவணன்.
இசை – கிரிஷ்.
(ஓடிடி) திரைப்படம் வெளியான தேதி – 24 செப்டம்பர் 2021
ரேட்டிங் –3.5 /5
தமிழ் திரைப்பட உலகில் பல வருடங்களாக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அதை மீண்டும் தமிழ் திரைப்பட உலகில் செலவு செய்வது பல படங்களை எடுத்து வரும் பட்டியலில் ஒரு சிலர் தான் இடம் பிடிப்பார்கள்.
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இந்த தம்பதிகள் வாழ்க்கையில் எந்த அளவுக்கு நடிப்பிலும் சரி தயாரிப்பிலும் சரி அவர்கள் வாழ்க்கையிலும் சரி வெற்றிகரமாக வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்கள்.
அதே போல தான் தமிழ் திரைப்பட உலகில் இவர்கள் வாழ்க்கை தமிழ் திரைப்பட உலகில் உள்ளவர்களுக்கு உதாரணமாக இருந்து வருகிறார்கள்.
அது போல இவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களும் தரமான திரைப்படங்கள்தான் சமீபத்தில் இவர்களின் படைப்பான சூரரை போற்று உலக அளவில் பேசபட்ட ஒரு திரைப்படமாக அமைந்தது.
அந்த வகையில் இவர்களின் 2டி நிறுவனத்தின் அடுத்த படைப்பான இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படமும் கிராமத்து கதை களம்தான்.
மிக சிறந்த கிராமத்து வாழ்வியல் யதார்த்தை சொல்லி இருக்கும் திரைப்படம்தான் இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும்.
தமிழ் திரைப்பட உலகில் இருக்கும் வரை கிராமத்து மண் வாசனை மறையாது மறக்காது என்பதற்கு ஒரு உதாரணம்தான் இந்த திரைப்படம்.
தமிழ்நாட்டை ஆள எந்த கட்சி வந்தாலும் ஜந்து வருடத்திற்கு ஒருமுறை மாறி மாறி வந்தாலும், மக்களுக்கு கிடைக்க வேண்டியவை எதுவுமே மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை, என்பதை சொல்வது மட்டும் அல்லாமல், அவற்றை பெற மக்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதற்கான தீர்வையும் சொல்வது தான் இந்த திரைப்படம் ‘ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்.
இன்று அப்பாவி மக்களும் குறிப்பாக கிராமத்து மக்கள் அரசியல்வாதிகளின் பிடியில் எப்படி எல்லாம் சிக்கி தவிக்கிறார்கள், என்பதை சொல்லும் படம் தான் இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும்.
இந்த சூழ்நிலையில் ஒரு அரசியல் விழாவுக்கு இந்த மாடுகளை கொண்டு செல்கிறார் கதாநாயகன் மித்துன் மாணிக்கம்.
அங்கு ஒருவர் மாடு மேடைக்கு வர அடம் பிடிக்கிறது.
அந்த மாட்டை கட்டையால் அடிக்கிறார்.
அதை பார்த்த மித்துன் மாணிக்கத்துக்கு கோவம் வர அந்த மேடையில் யார் இருக்கிறார் என்று எல்லாம் பார்க்காமல் அமைச்சர்களை தள்ளிவிட்டு தனது வெள்ளையனையும் கருப்பனையும் கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார்.
இதனால் அந்த அரசியல்வாதின் கோவத்துக்கு ஆள் ஆகிறார்
கதாநாயகன் மித்துன் மாணிக்கம் இதன் விளைவு மாடுகள் காணாமல் போகிறது இந்த மாடுகளை மீட்டாரா இல்லையா என்பது இந்த இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் திரைப்படத்தின் மீதி கதை
வறண்ட கிராமத்தில் வானம் பார்த்த பூமி விவசாயம் செய்யும் தம்பதி கதாநாயகன் மித்துன் மாணிக்கம் மற்றும் கதாநாயகி ரம்யா பாண்டியன் இவர்களிடம் இரண்டு காலை மாடுகள் இதை இவர்கள் சின்ன வயதில் இருந்து அதாவது கன்னுக்குட்டியாக இருக்கும் போதிலிருந்து தான் பெற்ற குழந்தைகளாக வளர்த்து வருகிறார்கள்.
இதை இவர்கள் மாடு மாதிரி வளர்க்காமல் தன் சொந்த குழந்தைகள் போல வளர்த்து வருகின்றனர்.
இதற்கு வெள்ளையன் கருப்பன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.
இதற்காக இவர்கள் கதாநாயகன் மித்துன்மாணிக்கம் கதாநாயகி ரம்யா பாண்டியன் இருவரும் குழந்தை பெற்று கொள்வதையும் கல்யாணம் முடிந்த அன்றிலிருந்து தள்ளி போட்டு வருகிறாகள்.
இந்த மாடுகளை குழந்தைகள் போல பாதுகாத்து வருகின்றனர் இதை இவர்கள் அடிக்க மாட்டார்கள்.
வேறு யாரவது அடித்தாலே இல்லை தப்ப பேசினாலோ இவர்கலுக்கு கோவம் வந்து விடும்.
முக்கிய கதாபாத்திரத்தில் வாணி போஜன் இவர்களோடு முக்கிய பாத்திரத்தில் வடிவேல் முருகன் மற்றும் பலர் நடிப்பில் சுகுமார் ஒளிப்பதிவில் பாடகர் கிருஷ் முதல் முறையாக இசையமைத்து வெளிவந்து இருக்கும் படம் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இந்த திரைப்படத்தின் இயக்குனர் அரசில் மூர்த்தி.
இயக்குனர் அரசில் மூர்த்தி. திரைப்படத்தின் கதை களமும் சரி திரைக்கதையும் சரி மிக நேர்த்தியாக அமைத்துள்ளார்.
திரைப்படத்தின் பலம் திரைகதையும் வசனமும் என்று சொன்னால் மிகையாகது பல கதாபாத்திரங்கள் மிகவும் புதுமையாகவும் ஏன் நடித்தவர்களும் மிக அற்புதம் என்றுதான் கண்டிப்பாக சொல்லி ஆகவேண்டும்.
நடிகர்களின் தேர்வு மிக கனகச்சிதம் காட்சிக்கு காட்சி இயக்குனர் நம்மை கவருகிறார் பல காட்சிகள் நமக்கு ஆச்சிரியத்தை உண்டு பண்ணும் அந்த அளவுக்கு நேர்த்தியாக அமைத்துள்ளார் இயக்குனர்
அரசில் மூர்த்தி.
கதாநாயகன் மிதுன் மாணிக்கம் அறிமுக கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு இல்லாமல் மிகவும் தேர்சியான ஒரு நடிகராக வளம் வந்துள்ளார்.
கதையின் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் அற்புதமாக நடித்துள்ளார்.
கதாநாயகி ரம்யா பாண்டியன் மீண்டும் ஒரு நேர்த்தியான நடிப்பு இவருக்கு ஏற்ப ஒரு கதாபாத்திரம் கிராமத்து பொண்ணு போலவே தோற்றமும் சரி நடிப்பிலும் சரி வெளுத்து வாங்கி இருக்கிறார்.
வாணி போஜன் தொலைகாட்சி நிருபராக வந்து நடிப்பில் நம்மை கருகிறார் கதைக்கு முக்கியமான பாத்திரம் என்பதை உணர்ந்து நடித்துள்ளார்.
ஒரு நிஜ நிருபர் போல நடித்துள்ளார்.
அதே போல திரைப்படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் வடிவேல் முருகன் நம்மை மிகவும் கவர்ந்துள்ளார்
கதாநாயகனுக்கு உதவி செய்வதற்கு கட்சித்தலைவர் போல் வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி சீமானை போல நடித்த முத்துப்பாண்டி சீமானை தூக்கி சாப்பிடும் அளவிற்கு நடித்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் கட்சி மேடைகளில் எப்படி பேசுவாரோ அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் எப்படி பேசுவாரோ அதே போல் பேசி நடித்திருக்கிறார்.
இந்த சீமானை போல் நடித்த முத்துப்பாண்டி காமெடி காட்சிகள் போல் உள்ளதால் முத்துப்பாண்டிக்கு நாம் தமிழர் கட்சி சகோதரர்களால் எந்த ஒரு ஆபத்தும் இல்லை.
இவர் நகைசுவை நடிகரா இல்லை குணசித்திர நடிகரா என்று சொல்லும் அளவுக்கு நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.
இவர் வரும் காட்சிகள் அரங்கம் அதிருகிறது.
இயக்குனரின் மிக பெரிய பலம் ஒளிபதிவாளர் சுகுமார் கதைக்கு ஒளிப்பதிவு மூலம் பிரமாண்டத்தை காண்பித்துள்ளார்.
ஒவ்வொரு காட்சியும் பல வண்ணங்கள் தீட்டிய ஓவியம் போல அமைத்துள்ளார்.
பாடலாசிரியர்கள் விவேக், யுகபாரதி, மதங்குமார் ஆகியோரின் வரிகள் மக்களின் செவிகளில் மட்டும் இன்றி மனதிற்குள்ளும் இறங்கும் வகையில் இசையமைத்திருக்கும் கிரிஷ்.
அதேபோல படத்தின் இன்னொரு மிக பெரிய பலம் என்றால் அது இசையமைப்பாளர் கிருஷ் ஆம் ஒவ்வொரு பாடல்களும் சரி பின்னை இசையும் நம் காதில் ரீங்காரம் விடுகிறது
பின்னணி இசையையும் நேர்த்தியாக கையாண்டுள்ளார்.
கலை இயக்குநர் முஜிபுர் ரகுமான் கைவண்ணத்தில் உருவான கிராமத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.
மொத்தத்தில், ’ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும்’ தானா எதுவுமே கிடைக்காது, நாம் முயன்று தான் பெற வேண்டும், என்பதை சில குறைகளோடு சொல்லியிருந்தாலும், சொல்லியிருக்கும் விஷயத்திற்காக இயக்குநரை தாராளமாக பாராட்டி வரவேற்கலாம்.
மொத்தத்தில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் திரைப்படம் பார்க்கும் நம்மை ஆளுகிறார்கள்.











