நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ திரையிடும் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு ‘விஸ்வாசம்’, ‘ஐரா’ மற்றும் ‘மிஸ்டர் லோக்கல்’ ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் ‘கொலையுதிர் காலம்’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் ‘யூ/ஏ’ சான்றிதழ் பெற்றது. இந்நிலையில், வருகின்ற ஜூன் 14ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.