Monday, September 27
Shadow

நாட்டின் ஒரே மொழியாக ஹிந்தியை ஆக்க முடியாது – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

பல்வேறு மாநிலங்களில் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி ஒன்று இருந்தால் தான் வளர்ச்சி அடையும். இந்தியை திணித்தால் தென்னிந்திய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏன் இந்தி திணிப்பை வட இந்திய மாநிலங்களில் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பொதுவான மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது. ஒரே மொழியாக இந்தியை ஆக்க முடியாது. பொதுவான மொழியை துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் கொண்டுவர முடியாது என்று கூறியுள்ளார்.

CLOSE
CLOSE