Wednesday, May 27
Shadow

பஞ்சராக்ஷரம் திரை விமர்சனம்

நடிப்பு – சந்தோஷ் பிரதாப், கோகுல், அஷ்வின் ஜெரோம், மதுஷாலினி, சனா அல்தாப்
சிமான், ஜீவா ரவி சங்கர் குரு ராஜா மற்றும் பலர்.

தயாரிப்பு – பாரடாக்ஸ் புரொடக்ஷன்ஸ்

இயக்கம் – பாலாஜி வைரமுத்து

இசை – சுந்தரமூர்த்தி கே.எஸ்

மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

வெளியான தேதி – 27 டிசம்பர் 2019

ரேட்டிங் – 3.75/5

தமிழ் திரைப்பட உலகில் சில சமயங்களில் உலக தரத்துக்கு நிகராக திரைப்படங்கள் வரும் அது எப்போதாவது ஒரு முறை தான் வரும் ஆம் அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் இந்த பஞ்சராஷாரம்

தமிழ் திரைப்பட துறையில் பல இயக்குனர்கள் வித்தியாசமான கதைகளையும் தலைப்புகளையும் வைக்க முயற்சிக்கிறார்கள்

ஆனால் இந்த திரைப்படத்தின் வித்தியாசமான கதை களமும் வித்தியாசமான
தலைப்பை ஆன்மீகமாக அமைந்து ஏதோ சொல்ல வருகிறார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த பஞ்சராக்ஷரம் திரைப்படம்.

பஞ்சராக்ஷரம் என்றால்… நமசிவாய… என்ற இந்த ஐந்து எழுத்தை குறிக்கும் சொல். இப்படத்தில் ஐந்து மெயின் கதாபாத்திரங்கள், அவர்களின் குணாதிசயம் பஞ்சபூதங்களுடன் ஒப்பிட்டு சித்தரித்துள்ளார் இயக்குனர் பாலாஜி வைரமுத்து.

சில இயக்குனர்கள் மட்டும்தான் வழக்கமான சினிமாவிலிருந்து விலகி புதிதாக ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும என்று முயற்சிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக தன்னை அறிமுகப்படுத்துக் கொள்கிறார் இந்த திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி வைரமுத்து.

அடுத்து நம் வாழ்வில் என்ன நடக்கும் என்பதை பஞ்சராக்ஷரம் என்ற புத்தகத்தில் இருந்து படித்து நாம் தெரிந்துகொள்ள முடியும், என்ற முன்னுரையுடன் ஆரம்பம் ஆகிறது இந்த
பஞ்சராக்ஷரம் திரைப்படம்

இந்தப் திரைப்படம் ஒரு வித்தியாசமான சூப்பர் நேச்சுரல் அட்வெஞ்சரஸ் சைக்காலஜிகல் த்ரில்லர் என படக்குழுவினர் சொல்லியிருக்கிறார்கள். அதன்படியேதான் திரைப்படமும் அதன் கதையும் திரைக்கதையும் அமைந்திருக்கிறது.

பெங்களூரில் சாரிட்டபிள் டிரஸ்ட் நடத்தும் இசை நிகழ்ச்சியில் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப், கோகுல், அஷ்வின் ஜெரோம், கதாநாயகிகள் மதுஷாலினி, சனா அல்தாப் ஆகியோர் சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே நண்பர்களாக மாறுகிறார்கள்.

டிராவலரான கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் அனுபவத்தைக் கேட்டு அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

ஒரு இடத்தில் தங்கும் போது, அவர்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன் உள்ள பழங்கால புத்தகத்தைத் தேர்வு செய்து ஏதோ ஒரு பக்கத்தைப் படிக்கும் விளையாட்டை விளையாடுகிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் புத்தகத்தில் படித்தபடியே அவர்களது வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கிறது. இதனிடையே, சனா அல்தாப் திடீரென காணாமல் போகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் அவர்கள் சனாஅல்தாப்பை தேட ஆரம்பிக்கிறார்கள்.

Read Also  அடங்க மறு விமர்சனம்

மீண்டும் அதே புத்தகத்தை எடுத்து படித்து அதன்படி நடக்க முடிவெடுக்கிறார்கள். தொடர்ந்து எதிர்பாராத சம்பவங்கள் அவர்களுக்கு நடக்கிறது. அதன் முடிவு என்ன என்பதுதான் இந்த திரைப்படத்தின் மீதி கதை.

இந்தப் திரைப்படத்தில் கதை திரைக்கதை வசனம் அமைப்பதற்கு ஒரு புது விதமான யுக்தியைக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். பாலாஜி வைரமுத்து.

பேன்டஸியான கதையும் கூட என்பதால் அது அவருக்குக் கை கொடுத்திருக்கிறது. இப்படித்தான் திரைக்கதை வேண்டும் என்று முடிவு செய்து அதை எழுதிவிட்டு, அந்த புத்தகத்தில் இப்படித்தான் எழுதியிருக்கிறது.

என்று சொல்லி குறைகள் இருந்தாலும் தப்பித்துக் கொள்ளலாம். ஆனாலும், ஒரு பரபரப்பிற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாகவே செய்திருக்கிறார்கள். இயக்குனர் பாலாஜி வைரமுத்து

ஐந்து விதமான வேலையில் இருப்பவர்கள் ஒன்றாக சந்தித்து நண்பர்களாகிறார்கள்.

புல்லட்டிலேயே இலக்கில்லாமல் பயணம் செய்பவராக கதாநாயகன் சந்தோஷ் பிரதாப். இசைக்குழு நடத்தி பெரிய இசையமைப்பாளராக வேண்டும் என்று நினைக்கும் கோகுல். கார் ரேஸராக வேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் அஷ்வின் ஜெரோம். பத்திரிகை வேலையை விட்டுவிட்டு எழுத்தாளராக வேண்டும் என நினைக்கும் மதுஷாலினி. சமூக சேவைக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சனா அல்தாப். ஒவ்வொவருவரும் அவரவர் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து மிக அருமையாக நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் கொடூர வில்லனாக சீமான், இந்த சீமான் வேறு ஒருவர். கட்டு மஸ்தான உடம்பில் முரட்டுத்தனமான வில்லத்தனத்தை வெளியிடலாம். பலசாலியை எதிர்க்க வேண்டும் என நினைக்கும் ஹீரோக்கள் இவரை தங்கள் படங்களில் வில்லனாக நடிக்க வைக்கலாம்.

திரைப்படத்தை ஒன்றை ரசிக்க வைப்பதற்கு ஒளிப்பதிவாளர் யுவா அதிகம் மெனக்கெட்டிருக்கிறார். காமிரா ஆங்கிள், லைட்டிங் என படத்தில் முடிந்த அளவு வித்தியாசத்தைக் காட்டியிருப்பதில் அவருடைய பங்கு மிகவும் அதிகம். இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியும் பாடல்களும் பின்னணி இசையிலும் பரபரப்பூட்டி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நமக்கு அதிகம் தெரிந்த முகமாக யாரும் இல்லை என்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை. இருந்தாலும் இம்மாதிரியான படங்களில் கதாபாத்திரங்களில் புதுமுகங்கள் நடித்தால் கூட பொருத்தமாகத்தான் இருக்கும். மாறாக ஒரு சில படங்களில் நடித்த வளரும் நடிகர்களைப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குனர். பாலாஜி வைரமுத்து

இடைவேளை வரை இருக்கும் ஒரு பரபரப்பு, இடைவேளைக்குப் பின் கொஞ்சம் குறைகிறது. எப்படியும் புத்தகம் காட்டும் வழியில் அவர்கள் நினைத்த இலக்கை அடைந்து விடுவார்கள் என நாம் யூகிக்க முடிவது சுவாரசியத்தைக் குறைத்துவிடுகிறது.

பஞ்சராக்ஷரம் – படம் பரபரப்புடன் நல்ல படம் குடும்பத்துடன் கண்டிப்பாக பார்க்கலாம்.