வீட்ல விசேஷம் திரை விமர்சனம் ரேட்டிங் :- 3.25 / 5.

நடிகர் நடிகைகள் :- ஆர்.ஜே. பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, கே.பி.ஏ.சி. லலிதா, யோகிபாபு, மயில்சாமி, மரியான் ஜார்ஜ், ஷிவானி நாராயணன், புகழ், பவித்ரா லோகேஷ், விஷ்வேஷ், கமலா காமேஷ்,
மற்றும் பலர்.

இயக்கம் :- ஆர்.ஜே பாலாஜி & என்.ஜே சரவணன்.

ஒளிப்பதிவு :- கார்த்திக் முத்துக்குமார்.

படத்தொகுப்பு :- செல்வா ஆர்.கே.

இசை :- கிரிஷ் கோபாலகிருஷ்ணன்.

தயாரிப்பு :- ஜீ ஸ்டுடியோஸ், பேவியூ ப்ராஜெக்ட்ஸ்,
ரோமியோ பிக்சர்ஸ்.

ரேட்டிங் :- 3.25 / 5.

ஹிந்தி திரைப்பட உலகில் 2018ஆம் வருடம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ‘பதாய் ஹோ’ திரைப்படத்தின் தமிழ் மொழி மாற்றம்தான் இந்தப் இந்த வீட்ல விசேஷம் திரைப்படம்.

தமிழுக்கு ஏற்றபடி பொருத்தமான நட்சத்திரத் தேர்வு செய்து அவர்களது சிறப்பான நடிப்பு இந்த திரைப்படத்தை தமிழிலும் இந்த வீட்ல விசேஷம் பேச வைக்கும் திரைப்படமாக மாற்றிவிட்டது.

குடும்பப் பாங்கான கதைகள் தமிழ் திரைப்பட உலகில் வருவது மிகவும் குறைந்துவிட்டது.

தமிழ் திரைப்பட உலகில் எப்போதாவது ஒரு முறைதான் இப்படியான குடும்பப்பாங்கான கதைகள் உள்ள திரைப்படம் வருகிறது.

அப்படி வந்துள்ள திரைப்படம்தான் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் ஒரு குடும்பக் கதைதான் மிக விவகாரமான ஒரு குடும்பக் கதை.

ஓய்வு பெறும் வயதில் இருப்பவர் ரயில்வே ஊழியராக இருக்கும் சத்யராஜ் அவருடைய மனைவி ஊர்வசி மற்றும் ஆசிரியர் வேலை பார்க்கும் மூத்த மகன் ஆர்.ஜே பாலாஜி, + 2 படிக்கும் விஸ்வேஷ், அம்மா கேபிஎசி லலிதா ஆகியோருடன் பாசமான குடும்பமாய் வாழ்ந்து வருகிறார்.

ஆசிரியர் வேலை பார்க்கும் கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜி வேலை பார்க்கும் பள்ளி நிர்வாகியான கதாநாயகி அபர்ணா பாலமுரளியை பள்ளியில் படித்த காலத்திலிருந்தே காதலித்து வருகிறார் கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜி.

கதாநாயகன் ஆர்.ஜே பாலாஜி கதாநாயகி அபர்ணா பாலமுரளியும்
இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்யும் நிலையில், கதாநாயகன் ஆர்.ஜே.பாலாஜி, தனது தாய் ஊர்வசி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

ஊர்வசியின் கர்ப்பத்தால் ஆர்.ஜே.பாலாஜி காதலுக்கு விரிசல் ஏற்படுகிறது.

இறுதியில் தாயின் கர்ப்பத்தை கதாநாயகன் ஆர்.ஜே.பாலாஜி ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? காதலி கதாநாயகி அபர்ணா பாலமுரளியுடன் இணைந்தாரா? இல்லையா? என்பதுதான் இந்த வீட்ல விசேஷம் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த வீட்ல விசேஷம் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜி நடித்திருக்கிறார்.

கதாநாயகன் ஆர்.ஜே.பாலாஜி
தனக்கே உரிய பாணியில் காமெடி, கிண்டல் நக்கல் நையாண்டி கலந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.

Read Also  ரைட்டர் திரை விமர்சனம் ரேட்டிங் –3.5 /5

குறிப்பாக இந்த வீட்ல விசேஷம் திரைப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகளில் அதிக கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.

தாய் தந்தை மீது கோபப்படுவது பாசத்தை புரிந்து கொள்வது என கதாநாயகன் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்.

கதாநாயகி அபர்ணா பாலமுரளி அதிக வேலையில்லை என்றாலும் அவர் வரும் காட்சிகளில் அம்சமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த வீட்ல விசேஷம் திரைப்படத்திற்கு பெரிய பலம் சத்யராஜ் மற்றும் ஊர்வசி.

இருவரும் பல காட்சிகளில் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தனது தாயை சமாளிப்பது தன் மனைவியை அரவணைப்பது என கிடைக்கும் இடங்களில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார் சத்யராஜ்.

ஊர்வசியின் நடிப்புக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.

கடினமான காட்சிகளில் கூட மிகவும் சர்வ சாதாரணமாக நடித்திருக்கிறார்.

அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் தான் திரைப்படத்தில் அதிக நேரம் வருகிறார்.

பல வருட நடிப்புக் காலங்களில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கவே மாட்டார்.

ஒரு பக்கம் பெருமிதமாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

மற்றொரு பக்கம் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம், தாய் மறுபக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகன்கள் என சமாளிக்க வேண்டும். அனைத்தையும் சமாளித்து தனி ஒரு சாம்பியனாக பெயரெடுக்கிறார் சத்யராஜ்.

தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரம் என இரண்டிலும் நாற்பது வருடங்களாக தனது நடிப்பில் தமிழ் திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்த நடிகை ஊர்வசி.

இந்த திரைப்படத்திலும் தன்னுடைய மிக அழுத்தமான முத்திரையைப் பதித்திருக்கிறார்.

ஊர் ஆயிரம் பேசினாலும்
யார் என்ன சொன்னாலும் சரி தான் எனது குழந்தை பெற்றே தீருவேன் என உறுதியாக இருக்கிறார்.

எந்த கேலி கிண்டலையும் தாங்கிக் கொள்ளும் வலிமையுடன் இருக்கிறார்.

இவரை விட்டால் இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க தமிழ் திரைப்பட உலகில் வேறு எவரும் இல்லை என்பதுதான் உண்மை.

சத்யராஜின் தாயாக வரும் கேபிஎசி லலிதா ஆரம்பத்தில் ஊர்வசியை வார்த்தையால் சுடுகிறாரே என்று யோசிக்க வைக்கிறார்.

ஆனால், மற்ற மருமகள்கள் ஊர்வசியை கிண்டல் செய்யும் போது ஊர்வசிக்கு ஆதரவாக இருந்து மற்ற மருமகள்களை வறுத்தெடுக்கும் காட்சியில் கண்ணீர் விட வைக்கிறார்.

சத்யராஜின் இளைய மகனான விஸ்வேஷ் வரும் காட்சிகளில் தன் வசனத்தால் தான் இருப்பதை உணர்த்துகிறார்

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை எந்தெந்த இடத்தில் உணர்வுகளை இன்னும் உருக்கமாகக் காட்ட வேண்டுமோ அங்கெல்லாம் சரியாகக் காட்டி, கூட்டுகிறது.

Read Also  வெண்ணிலா கபடி குழு 2 - திரை விமர்சனம்

கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

மேக்கிங்கில் எந்த ஒரு குறையும் இல்லாமல் ஒளிப்பதிவாளரும், படத்தொகுப்பாளரும் தங்கள் பணியை மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

50 வயதில் கர்ப்பம் அடைவது, வேற நோக்கத்தில் பார்க்கப் பட்டாலும், அதில் இருக்கும் காதல், பாசம், உணர்வு என அனைத்தும் கலந்து சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன்.

சுளிக்காமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி திரைக்கதை அமைத்ததற்கு பாராட்டுகள்.

கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘வீட்ல விசேஷம்’ திரைப்படம் அனைவராலும் வாழ்த்த படலாம்..