டைரி திரை விமர்சனம் ரேட்டிங்:- 2.5 / 5

நடிகர் நடிகைகள் :- அருள்நிதி, பவித்ரா ஷாரா, மாரிமுத்து, ஜெயபிரகாஷ், கிஷோர்,  சாம்ஸ், அஜய் ரத்னம், ருத்ரா, சோனியா சுரேஷ், செந்தி, ஓசூர் மாதேஸ்வரன், சேலம் புகழேந்தி, சென்னை எகான், பவித்தர், அல்போன்ஸ் ஜெயபாலன், கார்த்திக் ராமசாமி, சேதுபதி, பராஜுனா சாரா, பி.எஸ். ஜஸ்வந்த், எம்.மகாதேவ், தணிகை, சுரேந்திர தாக்கூர் , சூரஜ் பாப்ஸ், சதீஷ் கண்ணன், ஜெயலட்சுமி, தனம் (நக்கலிட்டில்ஸ்), ரஞ்சனா நாச்சியார், ஹரிணி,  எம்.எஸ், உதய் குமார், ராஜதுரை, மதன், மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- இன்னாசி பாண்டியன்.

ஒளிப்பதிவு :- அரவிந்த் சிங்.

படத்தொகுப்பு :- எஸ்.பி.ராஜா சேதுபதி.

இசை :- ரான் ஈதன் யோஹான்.

தயாரிப்பு :- பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்.

ரேட்டிங் :- 2.5 / 5.

 

தமிழ் திரைப்பட உலகில் ஏதாவது திரைப்படம் ஒரு வருடத்தில் கொடுத்தே ஆக வேண்டும் என நினைக்கும் நடிகர்கள் மத்தியில் நடிகர் அருள்நிதி எத்தனை வருடம் ஆனாலும் சரி தரமான நல்ல கதையை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் இப்படிப்பட்ட நடிகர்களும் இருக்கிறார்கள்.

அப்படி மிக தரமான கதையை தேர்வு செய்து நடித்து இப்போது மக்கள் மனதில் நிலைத்து நிற்பவர் நடிகர் அருள்நிதி.

வம்சம் திரைப்படம் முதல் தொடங்கி மௌனகுரு, டிமான்டி காலணி, ஆறது சினம் டி பிளாக் தேஜாவு என தொடர்ந்து தரமான திரைப்படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் அருள்நிதி.

தனக்கான வரும் கதைகளைத் தேர்வு செய்வதில் அருள்நிதி தனி கவனம் செலுத்துவார் என்று பெயர் பெற்றுள்ளார்.

இந்த டைரி திரைப்படத்தையும் அப்படித்தான் தேர்வு செய்திருப்பார் என தோன்றுகிறது.

இந்த டைரி திரைப்படத்தின் இயக்குனர் இன்னாசி பாண்டியன் கதை மட்டும் வித்தியாசமாக யோசித்துவிட்டு திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார்.

இந்த திரைப்படத்தின் இடைவேளைக்குப் பின் கடைசி இருபது நிமிடங்கள் மட்டுமே ரசிக்கும் விதமாக எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் அந்தக் கதையை ரசிக்கும் விதத்தில் கொடுக்கும் ‘மந்திரமே’ திரைக்கதையில்தான் இருக்கிறது.

அப்படி ஒரு திரைக்கதை மந்திரம் கூட இந்த டைரி திரைப்படத்தில் இல்லை.

ஊட்டியில் 13-வது கொண்டை ஊசி வளைவில் அடிக்கடி நடக்கும் விபத்தினால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள்.

காவல்துறை உதவி ஆய்வாளர் பயிற்சியை முடிக்கும் தருவாயில் இருக்கிறார் கதாநாயகன் அருள்நிதி.

தமிழக காவல்துறையால் முடிக்க முடியாத பல லட்சக்கணக்கான புகார்கள் இருக்கும் ஆவணக் காப்பகத்திலிருந்து ஒன்றை எடுத்து காவல்துறை உதவி ஆய்வாளர் பயிற்சி பெறுபவர்கள் விசாரிக்கலாம் என மேலதிகாரி கூறுகிறார்.

கதாநாயகன் அருள்நிதி தன் கண்ணை மூடிக் கொண்டு ஒரு புகார் ஃபைலை தேர்வு செய்கிறார் கதாநாயகன் அருள்நிதி.

கதாநாயகன் அருள்நிதி தேர்வு செய்து எடுத்த புகார் ஃபைலில் உதகமண்டலத்தில் ( ஊட்டி ) 16 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொள்ளை மற்றும் கொலை வழக்கு 16 ஆண்டுகளாக கண்டுபிடிக்காமல் இருந்த புகார் ஃபைல் அது.

உதகமண்டலம் ( ஊட்டி ) கதாநாயகன் அருள்நிதி அங்கு சென்று தனது விசாரணையை தொடங்குகிறார்.

16 ஆண்டுகளாக கண்டுபிடிக்காமல் இருந்த புகாரை விசாரிக்கப் போய் மேலும் சில பல மர்மங்களுக்கான விஷயங்கள் தெரிய வருகிறது.

அவர் விசாரிக்க சென்ற இடத்தில் பல மர்மங்கள் தெரிய வருகிறது என்ன மர்மங்கள் அந்த மர்மங்களுக்கு விடை கிடைத்ததா? கிடைக்க வில்லையா? என்பதுதான் இந்த ‘டைரி’ திரைப்படத்தின் மீதி கதை.

இந்த டைரி திரைப்படத்தில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ளார்.

காவல்துறை உதவி ஆய்வாளர் கதாபாத்திரங்களில் அருமையாக நடித்து அசத்தி உள்ளார்.

இவருக்கு காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் என்றாலே பொருத்தமாக இருக்கிறது.

கதாநாயகன் அருள்நிதி காவல்துறை உதவி ஆய்வாளராக அலட்டிக் கொள்ளாமல் நடித்திருக்கிறார்.

கதாநாயகி பவித்ரா மாரிமுத்துவை காதலிக்கும் போது ரசிகர்களை ரிலாக்ஸ் ஆக்குகிறார்.

அமானுஷ்ய கதைக்கு வேண்டிய பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார் அருள்நிதி

இந்த டைரி திரைப்படத்தில் கதாநாயகியாக கதாநாயகி பவித்ரா மாரிமுத்து நடித்துள்ளார்.

இவருக்கு அதிரடி காவல்துறை அதிகாரி கதாபாத்திரம் எடுபடவில்லை.

கதாநாயகிபவித்ரா மாரிமுத்து விசாரணையில் கதாநாயகன் அருள்நிதிக்கு உதவியாக மாறிப்போவது சறுக்கல்.

ஜெயப்பிரகாஷ், ஷாரா, சாம்ஸ், அஜய்ரத்னம், டி.எஸ்.ஆர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் முதல் பாதியை படமாக்கியிருந்த விதம் பாராட்டுக்குரியது.

இசையமைப்பாளர் ரான் ஈத்தன் யோஹான் திரைப்படத்தை எப்படியாவது தரம் உயர்த்திக் காட்டிவிட வேண்டும் என கடுமையாக உழைத்திருக்கிறார்.

இசை அமைப்பாளர் ரோன் யதோன் யோகன் இசை பயத்தை உண்டுபண்ணுகிறது.

எடிட்டர் ராஜா சேதுபதிக்கும் கடும் உழைப்பு தேவைப் பட்டிருக்கிறது.

கதாநாயகன் அருள்நிதிக்கு திரைக்கதையில் ஒரு சில காட்சிகளை மட்டுமே வைத்து ஏமாற்றியிருக்கிறார் இயக்குனர் இன்னாசி பாண்டியன்.

இயக்குனர் இயக்குனர் இன்னாசி பாண்டியன் எழுதிய டைரியை கதாநாயகன் அருள்நிதி முழுமையாக படிக்கவில்லை என நினைக்கிறேன்.

கதாநாயகன் அருள்நிதிகான இந்த டைரியில் முக்கியமான பக்கங்கள் இல்லவே இல்லை.

வித்தியாசமான கதையை யோசித்த இயக்குனர் திரைப்படத்தில் திரைக்கதை தான் தெளிவில்லாமல் இருக்கிறது.

தெளிவாக திரைக்கதை யோசித்திருந்தால் இந்த ‘டைரி’ ரசிகர்கள் மத்தியில் நீங்கா நினைவைத் இடம் பிடித்திருக்கும்.

மொத்தத்தில் டைரி திரைப்படம் டைரியில் சரியாக எழுதப்படாமல் இருக்கிறது.