பொய்க்கால் குதிரை திரை விமர்சனம் ரேட்டிங்:-3.5/5

நடிகர் நடிகைகள் :-  பிரபுதேவா, வரலக்ஷ்மி சரத்குமார், ஆழியா, ஜான் கொக்கென், ஜெகன், பிரகாஷ் ராஜ், ஷ்யாம், ரைசா வில்சன், ரியா ஷ்ரேயா, மற்றும் பலர்.

இயக்கம் :- சந்தோஷ் P ஜெயக்குமார்.

ஒளிப்பதிவு :- பல்லு.

படத்தொகுப்பு :- ப்ரித்தி மோகன்.

இசை :- டி.இமான்.

தயாரிப்பு :- மினி ஸ்டுடியோஸ், டார்க் ரூம் பிக்சர்ஸ்.

ரேட்டிங் :- 3.5/5

தமிழ் திரைப்பட உலகில் தற்போது வரும் திரைப்படங்களில் குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய வரும் திரைப்படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய வரும் திரைப்படங்கள் த்ரில்லர் திரைப்படங்களாக இருக்கிறது.

இந்தப் திரைப்படமும் அப்படித்தான் குழந்தைக் கடத்தலை மையப்படுத்திய வந்திருக்கும் ஒரு திரைப்படம்தான் பொய்க்கால் குதிரை

ஆனால் த்ரில்லர் திரைப்படமாக மட்டும் அல்லாமல் சென்டிமென்ட் திரைப்படமாகவும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மிக அருமையான திரைப்படமாக கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தமிழ் திரைப்படம் உலகில் தொடர்ந்து சில ஆபாச திரைப்படங்களை இயக்கி இமேஜை கெடுத்துக்கொண்ட இவர் தற்போது தனது இமேஜை மாற்றிக் கொள்ள இப்படி ஒரு அருமையான திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்.

தனது செல்ல மகளுக்காக போராடும் ஒற்றைக்கால் தந்தையின் அதிகப்படியான பாசம்மும் வாழ்க்கையும் வலியும்தான் இந்த பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் கதை.

தனது தந்தை, ஒரு கால் இல்லாமல் கஷ்டப்படும் சிறு வயது மகளின் பாசம் என பெண்களையும் தமிழ் திரைப்பட பிள்ளைகள் உள்ள ரசிகர்கள் கவரும் விதமாக திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார்.

ஒரு விபத்தில் தனது மனைவியையும் இடது காலின் முட்டிக்குக் கீழ் உள்ள பகுதியையும் இழந்து தனது செல்ல மகள் பேபி ஆழியாவுடன்
வாழ்ந்து வருகிறார் கதாநாயகன் பிரபுதேவா.

அந்த நேரத்தில் கதாநாயகன் பிரபுதேவாவுக்கு நடந்த விபத்துக்கான காப்பீடு நிறுவனத்திடம் இருந்து நிவாரணப் பணம் கிடைக்கிறது.

காப்பீடு நிறுவனத்திடம் இருந்து கிடைத்த நிவாரணப் பணத்தை வைத்து தனது செல்ல மகள் ஆழியாவை நல்ல பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என அவர் முடிவெடுக்க தனது செல்ல மகளோ தனது தந்தைக்கு செயற்கைக் கால் வாங்க வேண்டும் என வற்புறுத்தி தந்தையை சம்மதிக்க வைக்கிறாள்.

தனது செல்ல மகள் ஆழியாவுக்கு உயிருக்கு ஆபத்தான ஒரு நோய் வர மகளை காப்பாற்ற சிகிச்சைக்காக லட்சக் கணக்கில் பணம் தேவை படுகிறது.

எனது செல்ல மகள் ஆழியாவை காப்பாற்ற லட்ச கணக்கில் தேவைப்படும் பணத்திற்காக பல வழிகளில் போராடுகிறார் கதாநாயகன் பிரபுதேவா.

Read Also  லாஸ்ட் 6 ஹவர்ஸ் திரை விமர்சனம் ரேட்டிங்:-2.25./5

இந்த சூழ்நிலையில் ஒரு பிரபல தொழில் அதிபர் வரலட்சுமி சரத்குமாரின் மகளை கடத்தி பணம் சம்பாதிக்க திட்டம் திட்டுகிறார் கதாநாயகன் பிரபு தேவா.

ஆனால், கடத்தல் சமயத்தில் வரலட்சுமி சரத்குமாரின் மகளை வேறொரு நபர் கடத்தி விடுகின்றனர்.

கடத்தல் முயற்சியில் கதாநாயகன் பிரபு தேவா வரலட்சுமி சரத்குமாரிடம் சிக்கிக் கொள்கிறார்.

வரலட்சுமி சரத்குமாரிடம் கதாநாயகன் பிரபுதேவா கடத்தப்பட்ட உங்கள் மகளை நான் கண்டுபிடித்து தருகிறேன் என களத்தில் இறங்குகிறார்.

வரலட்சுமி சரத்குமார் கடத்தப்பட்ட மகளை கண்டுபிடித்தாரா? கண்டு பிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த பொய்க்கால் குதிரை திரைப்படத்தின் கதாநாயகனாக பிரபுதேவா நடித்திருக்கிறார்.

பெண் குழந்தையின் தந்தையாக ஒரு கால் இல்லாத கதாபாத்திரத்தில் பிரபுதேவா மிக அருமையாக நடித்துள்ளார்.

கதாநாயன் பிரபுதேவாவின் நண்பனாக ஜெகன், வரலட்சுமியின் கணவராக ஜான் கொக்கேன் ஆகியோரும் சில காட்சிகளில் வந்து கொடுத்த கதை புத்தகத்தை நிறைவாக செய்திருக்கிறார்கள்..

அழகான தோற்றம் மற்றும் நடிப்பு மற்றும் சுட்டித்தனத்தால் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இருக்கிறார் சிறுமி ஆழியா.

ஒரு சில காட்சிகளில் மட்டும் பிரகாஷ் ராஜ் மற்றும் ஷாம் வந்து செல்கிறார்கள்.

மிகப் பெரும் தொழிலதிபரின் மகளாக வரும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பு அருமை.

தந்தையின் மறைவுக்குப் பின் அவரே கம்பெனியை நிர்வகிக்க ஆரம்பிக்கும்போது உண்மையான தொழில் அதிபராக தெரிகிறார்.

வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரத்திற்கு மிக பெரிய முக்கியத்துவம் எல்லாம் கிடையாது.

பாசமான ஒரு தாமாக மட்டுமே தெரிகிறார்.

இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

பின்னணி இசையில் பரவாயில்லை.

ஒளிப்பதிவாளர் பல்லுவின் ஒளிப்பதிவும் திரைப்படத்திற்கு சிறப்பு

ப்ரித்தி மோகன் படத்தொகுப்பு மிகவும் அருமை.

கதாநாயகன் பிரபுதேவா பொய்க்காலோ, செயற்கைக்காலோ தேவைப்படாத கதை என்ற போதும், ‘விபத்தில் தனது ஒரு கால் போனபோது ஊனமாக உணரவில்லை.

ஆனால் தனது செல்ல மகளை காப்பாற்ற முடியாதோ என நினைக்கும் போது ஒரு தந்தையாக ஊனமாக உணர்கிறேன்’ என்ற வசனத்தின் மூலம் ஒரு நியாயத்தைக் கற்பித்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் P ஜெயக்குமார்.

உடல் உறுப்புகளுக்காக குழந்தைகள் கடத்தல் என்ற விழிப்புணர்வு விசயத்துக்கு இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமாரை பாராட்டலாம்.

மொத்தத்தில் ‘பொய்க்கால் குதிரை’ திரைப்படம் பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை.