”பாகுபலி’ திரைப்பட வில்லனின் இல்லத்தில் வருமான வரி சோதனை*

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளரான சுரேஷ் பாபுவின் மகனும் ஆவர். இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இல்லம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.