மீண்டும் தளபதி விஜய் படத்தின் இனை தயாரிப்பாளரிடம் வருமான வரித்துறை சோதனை மாஸ்டருக்கு மட்டும் ஏன் இப்படி?

தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவர்களுடன் சாந்தனு, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்த போதே விஜய்யை சென்னைக்கு அழைத்து கொண்டு வந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது நடிகர் விஜய் & பிகில் பட தயாரிப்பாளர் & பைனான்சியர் அன்பு செழியன் வீடுகளில் சோதனை செய்தனர்

இந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!