‘பிகில்’ இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் – நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மீது பேனர் சரிந்து விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை, அவருக்கு பின்னால் வந்த லாரி ஏற்றியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் தள்ளியது. இந்நிலையில் நடிகர் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு தனது ரசிகர்கள் யாரும் தனக்கு பேனர்கள் வைக்ககூடாது என விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.