தமிழகம் முழுவதும் ‘தி கோட்’ வெளியாகும் திரையரங்குகளில் நடிகர் விஜய் பேனர், கட்அவுட் வைக்க காவல்துறை தடை விஜய் ரசிகர்கள் கண்டனம்!!
தமிழகம் முழுவதும் ‘தி கோட்’ வெளியாகும் திரையரங்குகளில் நடிகர் விஜய் பேனர், கட்அவுட் வைக்க காவல்துறை தடை விஜய் ரசிகர்கள் கண்டனம்!!
சென்னை 03 செப்டம்பர் 2024 நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கோட்’ திரைப்படம் (5-ந்தேதி) வெளியாகிறது.
திரையரங்குகளில் விஜய் பட பேனர்களை வைப்பதற்கு காவல்துறை தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திரையரங்கு பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் ரசிகர்கள் சார்பில் முறைப்படி அனுமதி கேட்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு காரணங்களை காட்டி காவல்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகித்தினரும் அனுமதி மறுத்து வருவது தெரியவந்துள்ளது.
இதனால் திரையரங்கு உரிமையாளர்களும் பேனர் வைப்பதற்கு அனுமதி அளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று ஆதங்கப்பட்டார்.
விஜய் ரசிகர் ஒருவர், இது தொடர்பாக சமூக வலை தளங்களில் விஜய் ரசிகர்கள் கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார்கள்.











