பிகில்’ படத்திற்கான எமோஜியை வெளியிட்டார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில்’ திரைப்படம் வருகின்ற 25ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழு தீவீரமாக களமிறங்கியுள்ளது. இந்நிலையில் ‘பிகில்’ படத்திற்கான எமோஜியை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘பிகில்’ எமோஜி வெளியானது முதல் ரசிகர்கள் அதனை ட்விட்டரில் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர். ஏற்கெனவே விஜய்யின் ‘மெர்சல்’, ரஜினிகாந்தின் ‘காலா’, சமீபத்தில் பிரபாஸின் ‘சாஹோ’ ஆகிய படங்களுக்கான எமோஜி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.