பீஸ்ட் திரை விமர்சனம் ரேட்டிங் 2.5/5

 

நடிகர் நடிகைகள் – தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஜார்ன் சுர்ராவ், வி.டி.வி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லிலிபுட் ஃபருக்கி, அங்கூர் அஜித் விகல் மற்றும் பலர்.

இயக்கம் – நெல்சன் திலீப்குமார்.

ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா.

படத்தொகுப்பு – ஆர். நிர்மல்.

இசை – அனிருத்.

தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்.

ரேட்டிங் – 2.5 /5

தமிழ் திரைப்பட உலகில் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் கதாநாயகன் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தை இந்த அளவிற்குக் அதிக பட்ஜெட்டில் மிகவும் நார்மலான கதையை வைத்து இதுவரையில் யாரும் இப்படி இயங்கி இருக்க மாட்டார்கள்.

இப்படியான கதைகளை கேப்டன் விஜயகாந்த், அர்ஜுன், நடிப்பில் பார்த்த கடத்தல், அதே தீவிரவாதிகள் ஆக்ஷன் பல திரைப்படங்களை பார்த்து விட்டோம்.

நடிகர் யோகி பாபு நடிப்பில் வந்த கூர்க்கா திரைப்படமும் இதை சாயலில் உள்ள கதைதான்.

என எந்த ஒரு மாற்றத்தையும் சிறிதும் யோசிக்காமல் இந்த திரைப் படத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.

பீஸ்ட் திரைப்படம் ஒன்றும் புதுமையான கதை ஒன்றும் இல்லை.

தன்னுடைய முதலிரண்டு நிரைப் படங்களிலும் கடத்தலை மையமாக வைத்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த பீஸ்ட் திரைப்படத்திலும் அந்த கடத்தல் பார்முலா கை கொடுக்கும் என்று நம்பியிருக்கிறார்.

ஆனால் இந்த கதை கைகொடுக்கவில்லை.

கடத்தல் கதைகளை அலசி ஆராய்ந்து இதுதான் சரியாக இருக்கும் என இந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தை எடுத்திருக்க வேண்டும்.

இராணுவத்தில் ரா பிரிவில் பணியாற்றி வரும் கதாநாயகன் விஜய், தீவிரவாதி உமர் பரூக் என்பவரை பிடிக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக ஒரு பெண் குழந்தை இறந்து விடுகிறது.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் கதாநாயகன் விஜய்,
இராணுவத்தில் ரா பிரிவில் பணியாற்றி வரும் வேலையை விட்டு விட்டு, விடிவி கணேஷ் நடத்தி வரும் செக்குரிட்டி சர்விஸ் அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார்.

சென்னையில் ஓ.எம்.ஆரில் உள்ள பெரிய மால் ஒன்றை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

அப்போது கதாநாயகன் விஜய் ஒரு மாலுக்கு செல்லும் போது அங்கு தீவிரவாதிகள் பொதுமக்களை பணைய கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள்.

அவ்வளவு பெரிய மாலில் பணயக் கைதிகளாக வெறும் 200 பேர்தான் மாட்டியிருக்கிறார்கள்.

சிறையில் இருக்கும் தங்கள் தீவிரவாதி தலைவன் உமர் பரூக் விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்கள்.

Read Also  சியான்கள் திரை விமர்சனம் ரேட்டிங் - 4./5

அந்த மாலில் இருக்கும் முன்னாள் ரா அதிகாரியான கதாநாயகன் விஜய், களத்தில் இறங்குகிறார்.

இறுதியில் கதாநாயகன் விஜய், மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை பிடித்தாரா ? இல்லையா? பணயக் கைதியாக இருக்கும் பொதுமக்களை காப்பாற்றினாரா? இல்லையா ? என்பதுதான் இந்த பீஸ்ட் திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த பீஸ்ட் திரைப்படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் கதாநாயகன் விஜய்.

கதாநாயகன் விஜய் சண்டைக்காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார்.

குறிப்பாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் கதாநாயகன் விஜய்.

கதாநாயகியாக வரும் பூஜா ஹெக்டே, கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.

இயக்குனர் செல்வராகவன் பாதுகாப்பு அதிகாரியாக நடிகராக அறிமுகமாகி உள்ளார்.

பாதுகாப்பு அதிகாரியாக வரும் இயக்குனர் செல்வராகவன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு வெளிப்படுத்தி இருக்கிறார்.

திரைப்படத்திற்கு பெரிய பலம் விடிவி கணேஷ்.

விடிவி கணேஷ் பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார்.

விடிவி கணேஷ் ஆங்காங்கே அடிக்கும் சில டைமிங்குகள் சிரிக்க வைக்கின்றன.

யோகி பாபு ஒரு சில இடங்களில் வந்து சென்றிருக்கிறார்.

பூஜா ஹெக்டேவின் வருங்காலக் கணவராக டான்ஸ் மாஸ்டர் சதீஷ் நடிப்பில் கடுப்பேத்துகிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒகே ரகம்.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.

ஒரே ஒரு ஷாப்பிங் மாலை எப்படி எப்படியெல்லாம் சுற்றிக் காட்ட முடியுமோ அப்படி சுற்றிக் காட்டுகிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.

பழைய கதையை தூசி தட்டி இயஙகி இருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

மொத்தத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்.