பொன்னியின் செல்வன்’ படம் குறித்த புதிய தகவல்

‘மணிரத்னம் இயக்கத்தில், நடிகைகள் ஐஸ்வர்யா, நயன்தாரா மற்றும் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் உள்பட பலர் நடிக்கவுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக ரத்னவேலு இணைத்துள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ‘இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!