ரஜினிகாந்தும் பாஜகவும் ஏன் சேரக்கூடாது – எஸ்.வி சேகர் கேள்வி ?

நடிகர்திலகம் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நடிகர் எஸ்.வி.சேகர் சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நடிகர் சங்கம் என்ற வார்த்தையில் நடிகர் என்பது சிவாஜி கணேசயை குறிக்கும். ஆனால் அவருக்கு மரியாதை செலுத்த நடிகர் சங்கத்தில் இருந்து இன்னும் யாரும் வராதது வருத்தமளிக்கிறது” என்று கூறினார். மேலும் கருப்பு பலூன் விடுபவர்கள் ஒன்றாக சேரும் போது, ரஜினிகாந்த் மற்றும் பாஜக போன்ற ஒரே கருத்து உள்ளவர்கள் ஏன் இணையக் கூடாது என்று கேள்வியும் எழுப்பினர்.

error: Content is protected !!