நடிகர்திலகத்திற்கு மரியாதை செலுத்தாத தமிழக திரையுலகம் சிவாஜி சமூகநல.பேரவை கண்டனம்.

சென்னை 04 அக்டோபர் 2021 நடிகர்திலகத்திற்கு மரியாதை செலுத்தாத தமிழக திரையுலகம் சிவாஜி சமூகநல பேரவை கண்டனம்

நேற்று (01-10-2021) நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் 94 வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் உட்பட பல முக்கிய தலைவர்கள் மரியாதை செலுத்திய நிலையில், தமிழக திரையுலகைச் சேர்ந்தவர்கள் (கவிஞர் வைரமுத்து தவிர) யாருமே வராதது வருத்தத்திற்கு உரியது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியதுமாகும்.

தமிழ் சினிமாவின் முகவரியாக, தமிழ்க் கலையின் அடையாளமாகத் திகழ்ந்து மறைந்த நடிகர்திலகத்திற்கு மரியாதை செலுத்தக்கூட நேரமில்லாமல் தமிழக திரையுலகினர் இருக்கிறார்களா?

கொரோனாவைக் காரணமாகக் கூறினாலும்கூட, தனிப்பட்ட முறையிலாவது தங்கள் வீட்டில் புகைப்படம் வைத்து மரியாதை செய்திருக்கலாம்.

கூகுல் தனது முகப்பில் நடிகர்திலகம் புகைப்படத்தை வைத்து கெளரவப்படுத்திய நிலையில், தங்கள் வீட்டு நாய் குட்டிபோட்டதைக் கூட ட்விட்டரில் பதிவிட்டு பெருமை கொள்ளும் பலகலைஞர்கள், நடிகர்திலகம் பிறந்த நாளுக்காக ஒரு வாழ்த்துப் பதிவைக்கூட போடாமல் அமைதிகாத்தது ஏனோ?

மொத்தத்தில் நன்றி மறந்துவிட்டதா தமிழ்த் திரையுலகம் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

கே.சந்திரசேகரன் தலைவர் நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை

error: Content is protected !!