ராக்கி திரை விமர்சனம் ரேட்டிங் –3 /5
நடிகர் நடிகைகள் – வசந்த ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி ரவீனா ரவி, ரோகிணி, ரவி வெங்கட்ராமன், மற்றும் பலர்.
இயக்கம் – அருண் மாதேஸ்வரன்.
ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.
படத்தொகுப்பு – நாகூரான்.
இசை – தர்புகா சிவா.
தயாரிப்பு – ரா ஸ்டுடியோஸ்.
ரேட்டிங் –3 /5
தமிழ் திரைப்பட உலகில் உதிரம் தெறிக்கத் உதிரம் சொட்ட சொட்ட, கொடூரமாகக் கொலை செய்யும் காட்சிகளைக் கொண்ட இப்படிப்பட்ட ஒரு வன்முறையான தமிழ் திரைப்படங்களில் இதுவரை வந்ததுமில்லை பார்த்ததும் இல்லை.
என் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தில் வன்முறையாட்டம் நடத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
தமிழ் திரைப்பட உலகில் சில இயக்குனர்கள் யதார்த்தமாக திரைப்படம் எடுக்கிறோம் என வன்முறை உதிரம் ஆதரவாக மற்றும் ஆதாரமாகவும் ஒரு சில திரைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட திரைப்படம் இயக்குனர்களின் வரிசையில் இந்தத் திரைப்படத்தின் அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரனும் இணைந்துள்ளார்.
வட சென்னையில் பெரும் தாதாவான பாரதிராஜாவுக்கும், கதாநாயகன் வசந்த் ரவிக்கும் ஏதோ ஒரு பெரும் பகை ஒனறு உள்ளது.
சிறை சாலையில் தண்டனை முடிந்து பல ஆண்டுகள் கழித்து திரும்பும் கதாநாயகன் வசந்த் ரவி.
தன் தாய், தங்கையைப் பார்க்க வருகிறார் கதாநாயகன் வசந்த் ரவி.
சிறை சாலைக்கு சென்று வந்த கதாநாயகன் வசந்த் ரவி, திருந்தி வாழ முயற்சி செய்கிறார்.
கதாநாயகன் வசந்த் ரவியின் தாய் பாரதிராஜாவால் தாய் ரோகிணியை கொல்லப்பட்ட உண்மை கதாநாயகன் வசந்த் ரவிக்கு தெரிய வருகிறது.
பாரதிராஜாவின் மகனுக்கும் கதாநாயகன் வசந்த் ரவிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.
இதனால் கோபமடைந்த கதாநாயகன் வசந்த் ரவி, பாரதிராஜாவின் மகனை கொலை செய்து விடுகிறார்.
மகனை கொலை செய்த
கதாநாயகன் வசந்த் ரவியை பாரதிராஜா
கொலை செய்ய துடிக்கிறார்.
இறுதியில் பாரதிராஜா கதாநாயகன் வசந்த் ரவியை கொலை செய்தாரா? கதாநாயகன் வசந்த் ரவி பாரதிராஜாவை கொலை செய்தாரா? என்பதுதான் இந்த ராக்கி திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கும் வசந்த் ரவி, வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தாய், தங்கை பாசம், சண்டை, ஏக்கம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார் கதாநாயகன் வசந்த் ரவி.
பாரதிராஜா தான் வில்லன். உட்கார்ந்து கொண்டு பேசியே வில்லத்தனத்தைக் காட்டுகிறார்.
பாரதிராஜா வில்லத்தனமான நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
வேறொரு பாரதிராஜாவை இந்த ராக்கி திரைப்படத்தில் பார்க்க முடிகிறது.
மகனை கொன்றவனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று துடிப்பது பாசத்தின் உச்சம்.
தங்கையாக வரும் ரவீனா ரவி, கோபம், பாசம் என நடிப்பில் வேற்றுமை காண்பித்து இருக்கிறார்.
திரைப்படம் பார்ப்பவர்களை தன் மீது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ரோகிணி.
மற்ற திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ரவுடிசம், பழிக்கு பழி வாங்கும் கதையை மையமாக வைத்து திரைப்படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
வழக்கமான கதை என்றாலும் அதில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன்.
திரைக்கதை நகர்வுக்கு ஏற்றவாறு ஒரு தலைப்பு வைத்து இயக்கி இருப்பது சிறப்பு.
வில்லன் பாரதிராஜா, வசந்த் ரவி இடையிலான உறவு என்ன, பகை என்ன என்பதை திரைப்படம் பார்க்கும் ரசிகனும் புரிந்து கொள்ளும் அளவிற்கு திரைப்படத்தைக் கொடுக்கவில்லை.
சில ஹாலிவுட் திரைப்படங்கள் பார்த்து கேங்ஸ்டர் திரைப்படங்களின் சாயலில் திரைப்படத்தைக் கொடுக்க வேண்டும் என இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார்.
பிளாஷ்பேக்கில் வரும் காட்சிகளை கருப்பு வெள்ளையிலும் நிகழ்கால காட்சிகளை போல் காட்டுகிறார்கள்.
சில காட்சிகளில் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் பிரேம்கள் பிரம்மிக்க வைக்கின்றன.
ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு திரைப்படத்திற்கு பெரிய பலம்.
வித்தியாசம் என்ற பெயரில் முழு திரைப்படத்தையும் இருட்டிலேயே எடுத்திருக்கிறார்கள்.
அதுபோல் தர்புகா சிவாவின் இசையும் திரைப்படத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது.
கதையோடு பயணிக்கும் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
தர்புகா சிவா பின்னணி இசையில் மிரட்டி முயற்சித்திருக்கிறார்.
மொத்தத்தில் ராக்கி திரைப்படம் உதிரம் உறைந்த திரைப்படம்.