வில்லன் நடிகர் ஆனந்தராஜின் சகோதரர் கனகசபை விஷம் அருந்தி தற்கொலை.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளைய திலகம் பிரபு சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்தவர் நடிகர் ஆனந்தராஜ்.

அண்மையில் பிகில் படத்தில் தளபதி விஜய்யுடன் நடித்திருந்தார்.

இவர் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்.

இவருக்கு ஐந்து சகோதரர்கள், 2 தங்கைகள் உள்ளனர்.

சகோதரர்களில் ஒருவரான கனகசபையின் (55), வீடு அண்ணா சாலையொட்டி திருமுடிநகரில் உள்ளது.

வட்டிக்கு பணம் தருவது மற்றும் ஏலச்சீட்டு நடத்தி வந்த கனகசபை திருமணம் செய்து கொள்ளாமல் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை அவரது வீட்டு கதவு பூட்டியே இருந்த்து. கதவு. திறக்கப்படவில்லை.

இதையடுத்து கதவை உடைத்து பார்த்து உள்ளே சென்றனர். அங்கு விஷ பாட்டில்கள் இருந்தன.

இதையடுத்து பெரியக்கடை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

“கனகசபை பைனான்ஸ், ஏலச்சீட்டு நடத்தி வந்ததும் அதில் ஏற்பட்ட நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளது.

மேலும் சொத்து பிரச்னையும் அவருக்கு இருந்துள்ளது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

அதன் பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும்.” என போலீசார் குறிப்பிட்டனர்.