Saturday, January 29
Shadow

வேலன் திரை விமர்சனம் ரேட்டிங் –2.75 /5

நடிகர் நடிகைகள் – பிரபு, சூரி, முகின், மினாட்சி கோவிந்தராஜன், மரியா வின்சென்ட், தம்பி ராமையா, ஹரிஷ் பெராடி, பிராங்ஸ்டர் ராகுல், பிரிஜிடா, ஜோ மல்லூரி, பில்லி முரளி, ஸ்ரீரஞ்சனி, சுஜாதா சிவக்குமார், பேராசிரியர் ஞானசம்பந்தன், லொள்ளு சபா சுவாமிநாதன், டி எம் கார்த்திக், ஹலோ கந்தசாமி, மற்றும் பலர்.

இயக்கம் – கவின்.

ஒளிப்பதிவு – கோபி ஜெகதீஸ்வரன்.

படத்தொகுப்பு – கா சரத்குமார்.

இசை – கோபி சுந்தர்.

தயாரிப்பு – ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்.

ரேட்டிங் –2.75 /5

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை ஆனால் வெளிவரும் திரைப்படங்கள் ஒரு சில திரைப்படங்கள்தான் புதிய கதை திரைக்கதை கொண்டிருக்கின்றன.

பெரும்பாலான திரைப்படங்கள் பழைய கதைகளேயே, கொஞ்சம் அப்படி, இப்படி மாற்றி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதில், இந்த வேலன் திரைப்படம் இரண்டாவது வகையான திரைப்படம்.

ஒரே ஒரு காதல் கடிதத்தை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்தக் காலத்தில் காதல் கடிதம் என்றால் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்தில் உள்ள காதலர்கள் காதலர்கள்.

பொள்ளாச்சியில் மிக பெரிய செல்வந்தராக வாழும் பிரபுக்கு மகனாக இருக்கிறார் கதாநாயகன் முகேன்.

ஒழுங்காக படிக்காமல், பன்னிரெண்டாம் வகுப்பை முன்று முறை பரிட்சை எழுதி பாஸ் செய்ததால் இவர் மீது கோபப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கிறார் பிரபு.

ஒரு வழியாக பன்னிரெண்டாம் வகுப்பில் பரிட்சை எழுதி பாஸ் செய்தார் கதாநாயகன் முகின்

கல்லூரிக்கு செல்லும் கதாநாயகன் முகேன் அங்கு கதாநாயகி மீனாட்சியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.

கதாநாயகி மீனாட்சி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தனது காதலை மலையாளத்தில் ஒருவரை வைத்து கடிதம் எழுதி கொடுக்கிறார் கதாநாயகன் முகின்.

காதலை சொல்ல காதல் கடிதம் எழுதி அவர் ஊருக்குச் சென்று கொடுக்க முயல, ஒரு குழப்பத்தில் தம்பி ராமையா கையில் கிடைக்கிறது.

அந்த கடித்தால் கதாநாயகன் முகினுக்கும், அவரது காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது.

தன் மகளுக்குத்தான் கதாநாயகன் முகின் காதல் கடிதம் எழுதினார் என பிரபுவிடம் வந்து சண்டை போட, பிரபு திருமணத்திற்கு சம்மதிக்கிறார்.

அப்பா பேச்சைத் தட்டக் கூடாதென நினைக்கும் கதாநாயகன் முகின், கதாநாயகி மீனாட்சியுடனான காதலை முறிக்கவும் முடியாமல் தடுமாறுகிறார்.

அவர்கள் இருவரின் காதல் என்ன ஆனது, யாருடன் திருமணம் ஆனது.

இதே சமயம் கேரளா எம்.எல்.ஏ. ஹரிஸ் பெரடி, பிரபு மீது இருக்கும் பகையை தீர்க்க முயற்சி செய்கிறார்.

இறுதியில் கதாநாயகன் முகின் காதலி கதாநாயகி மினாட்சி கரம்பிடித்தாரா? இல்லையா? ஹரிஸ் பெரடிக்கும் பிரவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்ன ஆனது? என்பதுதான் வேலன் திரைப்படத்தின் மீதிக்கதை.

Read Also  6 அத்தியாயம்

பிக் பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான முகின் இந்த வேலன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

முகினுக்கு இது சிறப்பான அறிமுகம் என்றே சொல்லலாம்.

முதல் திரைப்படம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடிப்பை கொடுத்திருக்கிறார்.

காமெடி, நடனம், ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார்.

காதலுக்காக உருகுவது, தந்தை பாசத்தில் சண்டை போடுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.

கதாநாயகன் முகின் காதலியாக மீனாட்சி இந்த வேலன் திரைப்படத்தில் மலையாளப் பெண் கதாபாத்திரம் மிங அருமையாக நடித்திருக்கிறார்.

கொஞ்சம் காதல், பின்னர் அழுகை என நகர்கிறது அவரது கதாபாத்திரம் சூப்பர்.

கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாநாயகன் முகினுடன் செல்லமாக சண்டைபோட்டு கவனிக்க வைத்திருக்கிறார் ப்ரிகிடா.

கதாநாயகன் முகினின் அப்பாவாக பிரபு, அவரது நடிப்பு வழக்கம் போல் அருமை.

முதல் பாதியில் ராகுலும், இரண்டாம் பாதியில் காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

இடைவேளைக்குப் பின்தான் வருகிறார் சூரி.

ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை பன்ச் அடித்து சிரிக்க வைக்கிறார்.

தம்பி ராமையா வழக்கம் போல கத்தி கூப்பாடு போடுகிறார்.

தேசிய விருது வாங்கியவர் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். வில்லனாக ஹரிஷ் பெரடி. இடைவேளை வரை கல்லூரி காட்சிகளில் வரும் ராகுல் அதன்பின் காணாமல் போகிறார்.

ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

காதல், காமெடி, பாசம் என்று கமர்சியல் அம்சத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவின்.

நேர்த்தியான திரைக்கதை திரைப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.

கோபி ஜெகதீஸ்வரன் பொள்ளாச்சி, பாலக்காடு பகுதிகளை அதன் பசுமையுடன் காட்டியிருக்கிறார்.

ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் கலர்ப்புல்லாக இவரது கேமரா படம் பிடித்து இருக்கிறது.

கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக முகேன் பாடிய சத்தியமா என்ற பாடல் முணுமுணுக்க வைத்திருக்கிறது.

இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி அழுத்தமான காட்சிகள், விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் அனைவரையும் கவர்ந்த திரைப்படமாக வந்திருக்கும்.

மொத்தத்தில் ‘வேலன்’ திரைப்படம் அனைவரும் பார்க்கலாம்.

CLOSE
CLOSE