Saturday, December 5
Shadow

ஹலோ டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. முழு விவரங்கள் இதோ…

இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.

என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் ஹலோ, உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில மொபைல் ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ ஓ ஸ் பயன்படுத்தும் மொபைல் போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது.

இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவையாக உள்ளது.
தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம்,

தகவல்தொழில்நுட்பச் சட்டம் 69ஏவின் அடிப்படையில் 59 ஆப்கள் தடைசெய்யப்படுகின்றன’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ‘இந்தியர்கள் அதிகளவில் பயன்படுத்தும் டிக்டாக், ஷேர்இட், யூசிப்ரோசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன ஆப்கள் தடை செய்யப்படுகின்றன.

நண்பர்கள் யாரை சந்தித்தாலும்.
பேஸ்புக் இருக்கீங்களா ..? வாட்ஸ் ஆப்ல இருக்கீங்களா.? என்று கேட்டவர்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளனர்.

டிக்டாக்ல இருக்கீங்களா.? ஹலோ ஆப்ல இருக்கீங்களா.? என்றே அனைவரும் கேட்கிறார்கள்.

அந்தளவுக்கு இன்றைய தலைமுறையும் இந்த மொபைல் ஆப்ஸ்களுக்கு மக்கள் அனைவரும் அடிமையாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் ஊரடங்கு நேரத்தில் மக்களும் அனைவரும் மொபைல் போனிலேயே மூழ்கி கிடைக்கின்றனர்.

மேலும் சமீபத்தில் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தி நமது ரானுவ வீர்ர்களை 20 பேரை கொன்று குவித்தனர்.

இதையடுத்து சீனா மொபைல் ஆப்களை அனைத்தையும் தடை செய்ய வேண்டும்.

சீனா பொருட்களை வாங்கவே கூடாது என மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீனா மொபைல் ஆப்களுக்கு நமது இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி 59 செயலிகள் லிஸ்ட் இதோ…