நடிகர் விஜயின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்குமாரின் துணிவு இரண்டு திரைப்படங்களின் வியாபாரம் – முழு விவரங்கள் உள்ளே.!

சென்னை 10 ஜனவரி 2023 நடிகர் விஜயின் வாரிசு மற்றும் நடிகர் அஜித்குமாரின் துணிவு திரைப்படங்களின் வியாபாரம் முழு விவரங்கள் உள்ளே.!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் தயாரிப்பாளர் தயாரிப்பில் நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகை மஞ்சு வாரியார் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளிவரவருகிறது.

தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் நடிகர் விஜய் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா நடிப்பில் உருவாகியுள்ள ஜனவரி 11ஆம் தேதி வெளிவரஉள்ளது.

ஜனவரி 11 2023 தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு இந்த இரண்டு திரைப்படத்தையும் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் அஜித்குமார் மற்றும் நடிகர் விஜய் இருவர் திரைப்படங்களும் கோலிவுட்டில் வெளியாகவுள்ள நிலையில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் மோதல் நடைபெற உள்ளது.

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நெகட்டிவ் ரோலில் மாஸ் அவதாரத்தில் நடிக்கும் ஒரு அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் திரைப்படமாக இருந்தாலும் அதிரடி ஆக்சன் பிடித்த திரைப்பட ரசிகர்களுக்கு துணிவு திரைப்படம் மிகப்பெரிய விருந்தாக அமையும்.

இயக்குநர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு மாஸ் மற்றும் கிளாஸை சமநிலைப்படுத்தும் ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக இருந்தாலும் செண்டிமெண்ட் பிடித்த திரைப்பட ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு விருந்தாக அமையும்.

இந்த இரண்டு திரைப்படங்கள் வெளியீட்டிற்கு முன்பே அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு  அதிகப் படியான லாபத்தை உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு திரைப்படங்களில் வியாபாரத்தின் விவரங்கள் கீழே பார்க்கவும்.

வாரிசு திரைப்படம்.

நடிகர் விஜய்யின் சம்பளம்: ரூபாய் 125 கோடி.

மற்ற நடிகர் மற்றும் நடிகைகள் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவு ரூபாய்100 கோடி.

நடிகர் விஜய் ‘வாரிசு’ நிரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூபாய் 225 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக திரையரங்கு உரிமை: ரூபாய் 70 கோடி வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

கேரளா உரிமை: ரூபாய் 6.5 கோடி வியாபாரம் ஆகியிருக்கிறது.

 கர்நாடக உரிமை: ரூபாய் 8 கோடி வியாபாரம் ஆகியிருக்கிறது.

 வெளிநாட்டு உரிமை: ரூபாய் 35 கோடி வியாபாரம் ஆகி இருக்கிறது.

 ஹிந்தி உரிமை: ரூபாய் 34 கோடி வியாபாரமாகியுள்ளது.

ஆடியோ உரிமை: ரூபாய். 10 கோடி விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

டிஜிட்டல் உரிமை: ரூபாய், 75 கோடி விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது.

சன் டிவி சாட்டிலைட் உரிமை: ரூபாய் 57 கோடி வாங்கி இருக்கின்றனர்.

வாரிசு திரைப்படத்தின் மொத்தம் ரூபாய் 295.50 கோடி

வாரிசு திரைப்படத்தின் மொத்த ப்ரீ-ரிலீஸ் வசூல் ரூபாய் 295.50 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதாவது தயாரிப்பாளர் தில் ராஜு ஏற்கனவே ரூ. 70 கோடி. சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’வை மிஞ்சும் வகையில் தெலுங்குப் பதிப்பான வாரிசு (வாரசுடு) வை அதிகபட்ச திரைகளில் வெளியிடுவதால், அவரது லாபம் அங்கு ரூபாய் 75 கோடி கிடைத்துள்ளதாக தகவல்.

துணிவு திரைப்படம்.

நடிகர் அஜித்குமார் சம்பளம்: ரூபாய்.70 கோடி

மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் மற்றும் தயாரிப்பு செலவு: ரூபாய் 90 கோடி.

நடிகர் அஜித்குமார் ‘துணிவு’ திரைப்படத்தின் பட்ஜெட்: ரூ.160 கோடி

தமிழ்நாடு திரையரங்கு உரிமை: ரூ. 60 கோடி வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

 கேரள உரிமை: ரூபாய். 2.5 கோடி

 கர்நாடக உரிமை: ரூங 3.6 கோடி

 ஹிந்தி உரிமை ரூபாய் 25 கோடி

 ஆடியோ உரிமை ரூபாய் 2 கோடி

ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமைகள்: ரூபாய் 1.5 கோடி

டிஜிட்டல் உரிமைகள்: ரூ. 65 கோடி

சாட்டிலைட் உரிமை: ரூபாய். 25 கோடி

வெளிநாட்டு உரிமைகள் (லைகா). ரூபாய் 14 கோடி வியாபாரம் செய்யப்பட்டிருக்கிறது.

துனிவு திரைப்படத்தின் மொத்த வியாபாரம் சுமார் 198.6 கோடிகள் இரண்டு திரைப்படங்களிலும் மேலே உள்ள தகவல்கள் ஆனால் வர்த்தக ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்