₹ 2000 திரை விமர்சனம் ரேட்டிங் –3 /5.

நடிகர் நடிகைகள் – பாரதி கிருஷ்ணகுமார், ருத்ரன் பராசு, அய்யநாதன் ,ஷர்னிகா, கராத்தே’ வெங்கடேஷ், ஓவியா, தியாகு, மற்றும் பலர்.
தயாரிப்பு – கோ. பச்சியப்பன்.
இயக்கம் – ருத்ரன்.
ஒளிப்பதிவு – பிரிமூஸ் தாஸ்.
படத்தொகுப்பு – லட்சுமணன்.
இசை – இனியவன்.
திரைப்படம் வெளியான தேதி – 26 நவம்பர் 2021
ரேட்டிங் –3 /5
மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளில் யாரேனும், எதையேனும் பேனாவால் எழுதினாலோ அல்லது கையெழுத்திட்டாலோ அந்த பணத்தாள் செல்லாது என்பது வங்கிகளின் பண பரிவர்த்தனை நடைமுறையில் இருக்கும் ஒரு எழுதப்படாத சட்டம்.
இதனால் பாதிக்கப்படும் ஒரு ஏழை தந்தையின் மனக்குமுறலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் 2000.
.
ரூபாய் நோட்டுக்களில் சிலர் எழுதிவிடுவதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை தான் கதை.
இதனால் ஒருவர் தன் குழந்தையையே இழக்கிறார்.
ஒரு ஏழை விவசாயி அய்யநாதனுக்கு திருமணமாகி பல ஆண்டுகளுக்குப்பின், அவருடைய மனைவிக்கு அழகான குழந்தை பிறக்கிறது.
ஏழை விவசாயி ஒருவர் நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்திருக்கும் அவருடைய பச்சிளம் குழந்தை, நோயால் பாதிக்கப்படுகிறார்.
அந்த குழந்தை உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவர், பிரத்யேக மருந்தினை வாங்கி வருமாறு அக்குழந்தையின் தந்தையிடம் கூறுகிறார்.
அவர் அருகில் இருக்கும் ஏடிஎம் மையத்திற்கு சென்று தனது வங்கி கணக்கில் இருந்து 1000 ரூபாய் அல்லது 500 ரூபாய் எடுக்க திட்டமிடுகிறார்.
ஆனால் ஏடிஎம்மில் 2000 தாள் மட்டுமே இருப்பதால், அதனை அந்த ஏடிஎம்மில் இருந்து எடுத்து கொள்கிறார்.
அந்த 2000 ரூபாய் மதிப்பு கொண்ட ரூபாய் தாளில் ஒருவர் பேனாவால் எழுதியிருக்கிறார்.
இதை பார்க்கும் அந்த விவசாயி, அந்த ஏடிஎம்மின் காவலாளியிடம் இது குறித்து விசாரிக்க, அவர் அலட்சியமாக பதிலளிக்கிறார்.
இருப்பினும் உயிருக்கு ஆபத்தான சூழல் இருப்பதால் விரைவாக அருகில் இருக்கும் மருந்து கடைக்கு சென்று அரசு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை வாங்குகிறார்.
அந்த மருந்து கடை உரிமையாளர் 2000 ரூபாய் ரூபாய் தாளில் எழுதி இருப்பதால் அது செல்லாது என கூறிவிடுகிறார்.
வங்கியில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
எனக்கு வேறு பணத் தாளைக் கொடுக்கும்படி கேட்கிறார்.
இதனால் ஏற்பட்ட தாமதத்தில் அந்த ஏழை விவசாயின் குழந்தை இறந்து விடுகிறது.
அதிர்ச்சி அடைந்த அந்த விவசாயி, தனக்கு ஏற்பட்ட சேவை குறைபாட்டினால் தான் தன்னுடைய வாரிசு மரணத்தை எதிர் கொண்டது.
இதற்குரிய இழப்பீடு வேண்டும் என கேட்டு நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கிறார்.
இந்த வழக்கு விசாரணையில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? இறுதியில் அய்யநாதனின் குழந்தை மரணத்திற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் இந்த 2000 திரைப்படத்தின் மீதிக்கதை.
மருத்துவ உதவிக்கு பணம்
நாம் அன்றாடம் கைகளில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டில் என்னென்ன சட்ட நுணுக்கங்கள் இருக்கின்றன, அது நமக்கு எப்படியெல்லாம் சாதகமாக இருக்கின்றன என்பதையெல்லாம் தன் திரைக்கதை மூலம் காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ருத்ரன்.
நல்ல கதைக்களத்தோடு இறங்கியிருக்கும் இயக்குனர் ருத்ரன் கவனிக்க வைக்கிறார்.
பாரதி கிருஷ்ணகுமார் நிஜமாக வழக்குரைஞராக வந்து நீதிமன்றத்தில் வாதிடுவது கம்பீரம் மிகவும் அருமை.
பணத்தில் ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து மக்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் பிரதிபலிக்கிறது என்பதைக் கூறும் காட்சி புதிது.
அரசு வழக்கறிஞராக வரும் கராத்தே வெங்கடேஷ் கச்சிதமான தேர்வு. விவசாயியாக அய்யநாதன், வழக்கறிஞர் அஜிதாவாக ஷர்னிகா உள்படம் பலரும் தேர்ந்த திரைக்கலைஞராக நடித்திருக்கிறார்கள்.
முற்றிலும் புதுமுகங்களே நடித்திருப்பதால், அவர்கள் அத்தனை பேரும் கதாபாத்திரங்களாகவே தெரிகிறார்கள்.
பெரிய கதாநாயகர்கள் நடித்திருந்தால் படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும். இடைவேளைக்குப்பின், வேகம் குறைகிறது.
குறைகளை தாண்டி, அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டிய படம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இனியவன் இசையையும் பிரிமூஸ் தாஸ் ஒளிப்பதிவையும் ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் இந்த திரைப்படம் ‘ரூபாய் 2000’ புது விதமான ரூபாய் நோட்டு.











