சியான்கள் திரை விமர்சனம் ரேட்டிங் – 4./5

நடிகர் நடிகைகள் – கரிகாலன், ரிஷா ஹரி தாஸ், நளினிகாந்த், பசுபதிராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரைசுந்தரம், சமுத்திரசீனி, சக்திவேல், நாராயணசாமி,

தயாரிப்பு – K L. PRODUCTION
G.கரிகாலன்

இயக்கம் – வைகறை பாலன்

ஒளிப்பதிவு – பாபு குமார் I.E

படத்தொகுப்பு – மப்பு ஜோதிபிரகாஷ்

இசை – முத்தமிழ்

மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா ரேகா ( D one )

திரைப்படம் வெளியான தேதி – 25 டிசம்பர் 2020

ரேட்டிங் – 4./5

இயக்குநர் நடிகர் தயாரிப்பாளர் சசிகுமாரின் உதவியாளராக இருந்த இவர் தமிழ் திரைப்பட உலகிற்கு அறிமுக இயக்குநராக களம் இறங்கிய முதல் திரைப்படம் கடிகார மனிதர்கள்.

இயக்குநர் வைகறை பாலன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிகர் கிஷோர் நடிப்பில் வெளி வந்து ரசிகர்களால் பேசப்பட்டு பாராட்டுப் பெற்ற திரைப்படம்தான் கடிகார மனிதர்கள்’

முதல் திரைப்படத்திலேயே பேசப்பட்ட இயக்குனராக மாறிய வைகறை பாலன்.

இவர் இயற்றிய முதல் திரைப்படமே மிகவும் தமிழ் திரைப்பட உலகில் பேசப்பட்ட திரைப்படம்.

அந்த திரைப்படத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் என்ன கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்ற கருத்து சொன்ன திரைப்படம்தான் கடிகார மனிதர்கள்.

சியான் என்றவுடன் ஞாபகத்திற்கு வருபவர் நடிகர் விக்ரம்தான் அவர் நடித்த சேது திரைப்படத்தின் மூலம் சியான் என்ற வார்த்தை புகழ் பெற்றது

பெற்ற பிள்ளைகளை வாழ வைக்க வேண்டும் என்பதற்காக தாய் தந்தை படுகிற கஷ்டங்களை பார்த்தபடியே வளர்கிற  பிள்ளைகள் அவர்களுக்கென ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்த பின்னர் உதாசீனப்படுத்துவதும் உதறித் தள்ளுவதும் முதியோர் இல்லங்களில் அவர்களை முடக்கிப்போடுவதும் மிகவும் கொடுமையானது.

பிள்ளைகள் ஆகிய நீங்கள் உங்களை பெற்ற தாய் தந்தை ஆகியோரை அவர்களின் வயது முதிர்ந்த காலத்தில் கைவிட்டு விடாதீர்கள்!

பிள்ளைகள் ஆகிய நீங்கள் உங்கள் பெற்ற பெற்றோரும் மனிதர்கள்தான் அவர்கள் மனதிலும் இருக்கும் பலவிதமான ஆசைகளை அதை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்!

இப்படி கருத்து சொல்ல ஏராளமான திரைப்படங்கள் வந்து இருக்கலாம்.

சியான்கள் திரைப்படம் இந்திய சர்வதேச பட விழாக்களில், விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்துள்ளது.

குழந்தை மனம் படைத்த வயது முதிர்ந்தோர் 7 பேரை வைத்து பிள்ளைகளுக்கு பாடம் நடத்தும் திரைப்படம்தான் சியான்கள்!

இந்த சியான்கள் திரைப்படத்தின் கருத்தை மிக வித்தியாசமான கதைக்களத்தில் விதைத்து ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குநர் வைகறை பாலன்.

அந்த எழு வயது முதிர்ந்தோர்களில் இரண்டு பேர் இயற்கையாக இல்லாமல் இயற்கை எய்துகிறார்கள்!

மிச்சமிருப்பதில் ஒரு சியான் நளினி காந்த் விமானத்தில் பறக்க வேண்டும் என்பது அவருடைய வாழ்நாள் கனவாக இருக்கிறது.

Read Also  சாயம் திரை விமர்சனம் ரேட்டிங் – 2.25 /5

அதை நிறைவேற்ற மற்ற சியான்கள் தங்களால் ஆனதை செய்ய முன்வருகிறார்கள்.

அந்த நேரமாகப் பார்த்து ஏரோப்ளேனில் பறக்க ஆசைப்படுகிற சியான் விபத்தில் சிக்குகிறார்.

அவரைக் காப்பாற்ற லட்சக்கணக்கில் செலவாகும் என்ற நிலைமை. அவரைச் சார்ந்தவர்கள் பணத்துக்கு தவியாய்த் தவிக்கிற சூழ்நிலை!

பணம் கிடைத்ததா? சியான் உயிர் பிழைத்தாரா? விமானத்தில் பறந்தாரா இல்லையா.?

வயதான முதியோர்களின் ஆசைகளும் கனவுகளும் நிறைவேறியதா இல்லையா என்பதுதான் சியான்கள்
திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகளை நம்பி திரைப்படம் எடுக்கும் காலத்தில் இப்படி யொரு முயற்சியை செய்த இயக்குநரையும் அதை தயாரித்த தயாரிப்பாளரையும் கண்டிப்பாக பாராட்டிதான் ஆக வேண்டும்

தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தின் மண்ணின் மணம் மாறாத மனிதர்களால் சூழப்பட்ட அந்த கிராமத்தில் உள்ள வயது முதிர்ந்தோர் தலை முடி தாடி, மீசை வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி எல்லாமும் வெள்ளையாய் எழு முதியோர்கள் ஒருவருக்கு ஒருவர் தேவையென்றால் தங்கள் உயிரைக் கூட கொடுக்குமளவிற்க்கு அந்த குழந்தை மனம் படைத்தவர்களாக இருக்கிறார்கள்.

கதாநாயகன் கரிகாலன் மெடிக்கல் ஷாப் அனுபவத்தை வைத்து அவரை டாக்டராக கொண்டாடுகிறது அந்த பின்தங்கிய கிராமம்

இளம் வயதினர் நட்பு வேரு ஆனால் வயது முதிர்ந்தோர்கள் நட்பு வேறு அப்படி ஒரு ஆழமான நட்பின் அடையாளம்தான் இந்த சியான்கள் !

ஊர் மக்கள் அனைவரும் அந்த வயது முதிர்ந்தோர்களை சியான் சியான் என்றழைக்கிறார்கள்.

நமது தாய் தந்தையரை நல்லபடியாய் கவனித்துக் கொள்ளும் பிள்ளைகளாக இருந்தால் நாம் பெருமிதப்படுவோம்.

தாய் தந்தைரை ஊதாசினப்படுத்துவர்களாக இருந்தால் இந்த சியான்கள் திரைப்படத்தை பார்த்தால் கண்டிப்பாக மனமாற்றம் உறுதி!

சடையனாக நளினிகாந்த் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.

மிலிட்டரி’யாக வரும் ஈஸ்வர் தியாகராஜன் ஏற்கனவே தடம் திரைப்படத்தில் போலீஸ்காரராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

இந்த ஈஸ்வர் தியாகராஜன் மிலிட்டரி இருந்து வந்து அவருடைய பழைய நண்பர்களுடன் சேருகிறார்.

மிலிட்டரி ஆக வரும் ஈஸ்வர் தியாகராஜன் அனைத்து சியான்களும் மலை மீது அமர்ந்து ஒவ்வொரு சியான்களின் ஆசைகளின் கூறி வர மிலிட்டரியாக நடிக்கும் ஈஸ்வர் தியாகராஜன் அந்தக் காட்சியில் அவர் பேசும் வசனம் அனைத்து வயதானவர்களுக்கும் அவர் பேசிய வசனம் மோட்டிவேஷனை ஏற்படுத்தும்.

ஓண்டிக்கட்டை’யாக பசுபதிராஜ் செவ்வால’யாக துரை சுந்தரம் மணியாட்டி’யாக சமுத்திர சீனியின் ஆசை மட்டும் வெள்ளைக்காரியுடன் அப்படி இப்படி இருக்க வேண்டும் எனக் கூற அந்த இடத்தில் கைதட்டல் வாங்குகிறார்.

‘ரஷ்யா’வாக சக்திவேல், செவனாண்டியாக நாராயணசாமி இவர்கள் அனைவருக்கும் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்.

Read Also  தேவி 2 - திரை விமர்சனம்

சியான்கள் ஏழு பேரின் தோற்றமும் அவர்களின் உற்சாகமும் படம் பார்க்கும் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

இதுவரை இப்படியான வயது முதிர்ந்த நட்பை திரையில் கண்டிருக்க மாட்டோம்.

தோற்றமும் நடிப்பும் மண்மணம் மாறாமலிருப்பது திரைப்படத்தின் பலம்.

சடையனாக வருகிற நளினிகாந்த் கூடுதலாய் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார்.

விமானத்தில் பயணம் செய்யும் செலவுக்காக வைத்திருந்த தன்னுடைய மனைவியின் தண்டட்டியை இன்னொருவருக்கு கொடுத்து உதவும் போது நளினிகாந்த் சியான் எல்லோர் மனதிலும் உயர்ந்து நிற்கிறார்.

சடையனாக வருகிற நளினிகாந்த் மகளாக வரும் பேச்சி அம்மாளின் உதாரணத்திற்கு கணவனிடம் தண்டட்டி தொலைந்து விட்டதாகக் கூறி தனது தந்தையின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று கொடுக்கும் காட்சியில் இருவரின் நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது.

சியான்கள் தவிர திரைப்படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கான நடிகர், நடிகைகள் தேர்வும் கச்சிதம்.

இந்த திரைப்படத்தின் கதாநாயகர்கள் சியான்கள் தான் என்றாலும், கதையோடு இணைந்து பயணிக்கும் கதாநாயகன் கரிகாலன் கதாநாயகி நிஷா ஹரிதாஸ் ஜோடியும், அவர்களின் மெல்லிய காதலும் அழகு!

பாடலாசிரியர் முத்தமிழ்
இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

பாடல்களை கதைகேற்ப கதைச் சூழலுக்கேற்ப எழுதியதற்காகவும் அவற்றை மனதைக் கவரும் விதத்தில் இசையமைத்து இத்திரைப்படத்திற்கு பக்கபலமாக இருந்து இருக்கிறார்!

பாபு குமாரின் ஒளிப்பதிவு தேனி மாவட்டத்தில் கிராமங்களை கண்முன் நிறுத்தி இருக்கிறார்.

மப்பு ஜோதி பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு என்ன தேவையோ அதை சரியாக தேர்ந்தெடுத்து ஒரு சிறந்த கோர்வையாக சியான்கள் திரைப்படத்தின் படத்தொகுப்பை செய்து கொடுத்துள்ளார்.

இந்த படத்தில் வசனங்கள் அனைத்துமே படம் பார்க்கும் நம்மை யோசிக்க வைக்கிறது.

வயதானவர்களை ஹோமில் சேர்ப்பதை பற்றி கூறும் காட்சியில் பெற்றோர்களை தூரத்து வைத்துக்கொண்டு அவர்களுடைய பெயரை இன்சியலாக பக்கத்தில் வைத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் எனக் கூறுவது மிகவும் அருமை.

வைகறை பாலனுக்கும் இசை அமைப்பாளர் முத்தமிழுக்கும் வாழ்த்துகள்.

கொரோனா வைரஸ் முடிநது வருட கடைசியில் முடிவில் மனதுக்கு மனநிறைவான திரைப்படம்தான் சியான்கள்.!

அந்த காலத்தில் பிறந்த பிள்ளைகளை பெற்றோர்கள் பாரமாக நினைக்கவில்லை ஆனால் இந்த காலத்தில் பிள்ளைகளோ பெற்றோர்களே பாரமாக நினைத்து அனாதை இல்லத்தில்  விட்டு விடுகிறார்கள்.

இந்த படத்திற்கு பிறகு யாரும் பெற்றோர்களே அனாதை இல்லத்தில் சேர்க்க வேண்டாம்.

அந்தக் காலத்தில் அனாதை குழந்தைகள் அதிகமாக இருந்தனர் ஆனால் இந்த காலத்தில் அனாதையான பெற்றோர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்.

இந்த சியான்கள் திரைப்படம் வயதானவர்களை காப்பாற்றும்.