புதிய திரைப்படங்களின் சிறப்பு காட்சிகளுக்கு இனி தனி கட்டணம் வசூலிக்கப்படும்.?*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்று வரும் மணவாள மாமுனிகள் ஜென்ம நட்சத்திர திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இடைத் தேர்தலைப் போன்றே அதிமுக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றி பெறும் என்று கூறினார். மேலும் இனி, சிறப்பு காட்சிகளுக்கு தனி கட்டணம் வசூலிக்க திரையரங்க உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.











