கொரோனா சிகிச்சைக்கு தனது கல்லூரியை வழங்கிய கேப்டன் விஜயகாந்த்

கொரோனா வைரஸ் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது.

ஒருபக்கம் தீவிர சிகிச்சைகள் நடைபெற்று வந்தாலும் மறுபக்கம் இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் அரசு மருத்துவமனைகளில் இடமில்லாமல் ரயில்வே பெட்டிகளையும் சிகிச்சை வார்டுகளாக மாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த்
கொரோனாவிற்க்கு தடுப்பு எதிராக நடவடிக்கைகளுக்கு பெரிய உதவியை செய்ய முன்வந்துள்ளார்.

இதுதொடர்பாக நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்…

கொரோனாவிற்கு எதிராக மத்திய அரசும் மாநில அரசும் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியையும் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேமுதிக தலைமை கழகத்தில் தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த நாடுகளில் வசிக்கும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் அத்தியாவசியப் பொருட்களுக்கான உணவு காய்கறி உடை மருந்து முகக் கவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்க வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும்.

ஊரடங்கு உத்தரவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஷேர் ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்திற்கு மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தினக் கூலி தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் தங்களால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும்.

இவ்வாறுநடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!