காவல்துறை என்பது பொறுப்பு மட்டுமே அதிகாரமில்லை சாத்தான்குளம் சம்பவத்திற்கு நடிகை வெண்பா சாட்டையடி.
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது மொபைல் போன் கடை மூடப்படும் நேரம் குறித்து விவகாரத்தில் தந்தை, மகனை (ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ்) அழைத்துச் சென்று காவல்நிலையத்தில் இருவரையும் வைத்து தாக்கியதால் மரணமடைந்தனர்
சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கொல்லப்பட்டதை அனைத்து அரசியல் அரசியல் கட்சித் தலைவர்களும் மற்றும் திரைப்படத் துறையை சார்ந்த திரை பிரபலங்களும் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளனர்.
காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ட்விட்டரில் #JusticeForJayarajAndFenix என்ற ஹேஷ்டேக்கில் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
ராகவா லாரன்ஸ், விஷால், குஷ்பூ, இமான், ஜெயம் ரவி, ஹன்சிகா, அதுல்யா, கதிர் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர் என்பதை நேற்றைய (ஜீன் 26) செய்தியில் பார்த்தோம்.
இந்த நிலையில் இளம் நடிகை வெண்பாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில்…
போலீஸ் என்பது பொறுப்பு.. அது அதிகாரமில்லை. ஒரு சிலரால் காவல்துறைக்கே களங்கம். ஒருபோதும் நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாது.
ஒரு குடும்பத்தில் இருவர் மரணம். ஈடு செய்ய முடியாத இழப்பு நிதியை விட நீதியே தேவை..
இப்படிக்கு வெண்பா என பதிவிட்டுள்ளார்.
கற்றது தமிழ், சிவகாசி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் நடிகை வெண்பா.
காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
விரைவில் வெளியாகவுள்ள ஆயிரம் ஜென்மங்கள் திரைபபடத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் வெண்பா என்பது குறிப்பிடத்தக்கது.
#JUSTICEFORJAYARAJANDBENNIX pic.twitter.com/N1QoPwLzZk
— venba (@VenbaOfficial) June 27, 2020











