சென்னை தரமணி பகுதியில் கேபிஆர் நிறுவனத்தின் 2வது கிளையை இன்று துவக்கியது.!!!

சென்னை 10 பிப்ரவரி 2023 சென்னை தரமணி பகுதியில் கேபிஆர் நிறுவனத்தின் 2வது கிளையை இன்று துவக்கியது.!!!

சென்னை, பிப். 10– அரசு, தனியார் நிறுவனங்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொடர்பான தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கிய வரும் முன்னணி நிறுவனமான கேபிஆர் நிறுவனம் தனது வர்த்தகத்ததை விரிவுபடுத்தும் விதமாக தனது 2வது கிளையை சென்னையில் இன்று துவக்கியது.

இந்நிறுவனத்தின் புதிய கிளை சென்னை, தரமணி பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் ஒரே நேரத்தில் 700 பேர் அமர்ந்து பணியாற்றும் வகையில் பிரமாண்டமாக உள்ளது.

இந்த ஆண்டில் இந்நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 3 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய அலுவலகத்தை இந்நிறுவனத்தின் நிலையான தொழில்நுட்ப தீர்வுகள் பிரிவின் தலைவர் ஜெய் இப்ராகிம் திறந்து வைத்து பேசுகையில், எங்களின் வணிக வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு தொழில்நுட்பம் சார்ந்த திறமைமிக்க ஊழியர்கள் உள்ளனர்.

அவர்களைக் கொண்டு இந்த பிராந்தியத்தில் எங்களின் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

எங்கள் நிறுவனத்தின் திறமையான ஊழியர்கள் முக்கியமான உலகளாவிய திட்டங்களை வழங்குவதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.

எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியில் ஊழியர்களின் பங்கு என்பது மிகச் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு ஆரோக்கியமான பணிச் சூழலை வழங்கும் விதமாக எங்கள் நிறுவனம் சார்பில் பல்வேறு புதுமைமிக்க மற்றும் துடிப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்தார்.

கேபிஆர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கீதா ராமமூர்த்தி கூறுகையில், இந்தியாவில் எங்களது வணிக வளர்ச்சியை விரைவுபடுத்துவதோடு, புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த பன்முகத்தன்மை கொண்ட திறமைமிக்க என்ஜினியர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க இருக்கிறோம். நாம் வாழும் பூமிக்கும், நமது வாழ்க்கையிலும் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த தீர்வுகளை வழங்கும் திறமைமிக்க ஊழியர்கள்  எங்களிடம் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

கேபிஆர் நிறுவனம் கடந்த 1974–ம் ஆண்டு முதல் இந்தியாவில் அமோனியா, சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ்  திட்டங்களை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2008–ம் ஆண்டு குர்கானிலும், 2012–ல் புனேவிலும், 2014–ல் சென்னையிலும் தனது அலுவலகத்தை திறந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் தனது 2வது அலுவலகத்தை இன்று திறந்திருக்கிறது.