தல தளபதி பற்றி சைக்கோ திரைப்படத்தின் கதாநாயகி நடிகை அதிதி ராவ். ரசிகர்களுடன் டுவிட்டரில் பேசினார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை மற்றும் செக்கச்சிவந்த வானம் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை அதிதி ராவ்.

சமீபத்தில் வெளியான இயக்குனர் மிஸ்கின் சைக்கோ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கு இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் இவர் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை அதிதி ராவ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.

அப்போது நெடிசன் தளபதி விஜய்யுடன் எப்பொழுது நடிக்க போகிறீர்கள் என கேட்க அதற்கு அவர் தளபதி விஜய்யிடம் கேளுங்கள் என்று பதிலளித்திருந்தார்.

பின்னர் தல அஜீத் குமாரை குறித்து சொல்லுங்கள் என்று மற்றொரு ரசிகர்கள் கேட்க நிரந்தரமான கிளாஸ் ஆனவர் அஜித் குமார் தான் என பதிலளித்தார்.

error: Content is protected !!