நண்பர்களை மறக்காமல் நண்பர்கள் தினத்தை கொண்டாடிய தளபதி விஜய்.!

ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்தியா முழுவதும் நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

பொதுவாக நண்பர்கள் தினத்தில் நண்பர்கள் குழுவாக கூடி வெளியே சென்று கொண்டாடுவது வழக்கமாக வைத்திருப்பார்கள்.

ஆனால், தற்போதைய கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள சூழ்நிலையில் அப்படி யாராலும் வெளியே சென்று கொண்டாட முடியாமல் நண்பர்கள் அனைவரும் கவலையுடன் இருக்கின்றனர்.

இதனால் வீடியோ கால் மூலம் நண்பர்கள் அனைவரும் குழுவாக ஒன்று சேர்த்து பேசி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தளபதி நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்துள்ளார்.

தளபதி நடிகர் விஜய்யின் நண்பரும், சின்னத்திரை நடிகருமான சஞ்சய் இந்த புகைப்படத்தை தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விஜய் தனது சிறு வயது நண்பர்களுடன் நேற்று வீடியோ காலில் பேசியுள்ளார்.

சஞ்சீவ், ஸ்ரீநாத், ராம்குமார், மனோஜ் உள்ளிட்ட அனைவருடனும் வீடியோ கால் மூலமாக நண்பர் தினத்தை கொண்டாடி உள்ளார்.

அதில் தளபதி நடிகர் விஜய்யின் கல்லூரி நண்பர்கள் அனைவரும் இருக்கின்றனர்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

error: Content is protected !!