நடிகர் அருள்நிதியை மருத்துவமனையில் நேரில் சென்று தமிழக முதல்வர் நலம் விசாரித்தார்.
நடிகர் அருள்நிதியை மருத்துவமனையில் நேரில் சென்று தமிழக முதல்வர் நலம் விசாரித்தார்.
சென்னை 07 நவம்பர் 2025 தமிழ் திரைப்பட உலகில் ‘வம்சம்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அருள்நிதி அறிமுகமானார்.
வம்சம், மவுனகுரு, டிமாண்டி காலனி, ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடித்த டிமான்டி காலனி, டிமான்டி காலனி 2 ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இவர் நடித்த ராம்போ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.
நடிகரும் மு.க.தமிழரசுவின் மகனுமான அருள்நிதி, படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை போரூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அருள்நிதிக்கு வலி அதிகரிப்பு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருள்நிதியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மேலும் உடல்நிலை மற்றும் அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அவருடன் எம்பி ஆ ராசா உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.











