நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை!

சென்னை 26 ஜூலை 2024 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த 2017 முதல் 2019 ஆம் ஆண்டு வரை தலைவராக இருந்த நடிகர் விஷால் சங்க நிதியை முறைகேடாக செலவழித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சங்க நிதியை முறைகேடாக செலவழித்தது தொடர்பான விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது என தீர்மானம் நிறைவேற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின்
கடந்த 2017-2019 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த திரு.விஷால் அவர்கள் மீது எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், 2019-ம் ஆண்டில் இருந்த தமிழ்நாடு அரசு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தனி அதிகாரியை நியமித்தது.

2019-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட தனி அதிகாரி (Special Officer)-சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்க்க வேண்டும் என்று ஒரு Special Auditor-ரை நியமித்தார்.

அந்த Special Auditor- கணக்கு வழக்குகளை சரிபார்த்து அளித்த அறிக்கையில்,

அப்பொழுது சங்கத்தில் இருந்த நிதியினை தவறான முறையில் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். அதில், சங்கத்தின் வங்கி கணக்கில் ஏற்கனவே வைப்பு நிதியாக வைக்கப்பட்டிருந்த ரூ.7-கோடியே 50-லட்சம், மற்றும் 2017-2019 ஆண்டுகளில் வரவு-செலவு ரூ.5-கோடியும் சேர்த்து சுமார் ரூ12-கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். அவ்வாறு

அவ்வாறு சங்கத்திலிருந்து முறைகேடாக செலவழிக்கப்பட்ட தொகையை சங்கத்திற்கு திரும்ப அளிக்க வேண்டும் என்று திரு விஷால் அவர்களுக்கு பலமுறை தெரியப்படுத்தியும் அவர் இதனால் வரை இந்த விதமான பதிலும் தராமல் உள்ளார்.

ஆகவே மேற்படி விஷயத்தை சரி செய்யும் பொறுப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தின் பொது குழுவின் பரிந்துரைப்படி செயற்குழுவில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இனி வரும் காலங்களில் நடிகர் திரு விஷால் அவர்களை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களில் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன் பின்னர் தங்களது பணிகளை துவக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள்.

error: Content is protected !!