மலையாளத் திரைப்பட உலகில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கப்பேலா’ திரைப்படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

இயக்குனர் முகம்மது முஸ்தபா இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘கப்பேலா’. விஷ்ணு வேணு தயாரித்துள்ள இந்தப் திரைப்படத்தில் அன்னா பென், ஸ்ரீநாத் பாஸி, ரோஷன் மேத்யூ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் மார்ச் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஆனால், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை காரணமாக ஊரடங்கினால் பலர் இந்தப் திரைப்படத்தைப் பார்க்க முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து ஜூன் 22-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் OTT இனையத்தளத்தில் வெளியிடப்பட்டது.

பலரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து திரைக்கதை அமைப்பு, அன்னா பென் நடிப்பு என்று கொண்டாடி வருகிறார்கள்.

அனுராக் காஷ்யப் தொடங்கி பல்வேறு முன்னணி நடிகர்களும் இந்த திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர்.

இதனால் இந்த திரைப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி உண்டானது.

தற்போது இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை சித்தாரா எண்டர்டையின்மெண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பில் உள்ள ஊரடங்கு உத்தரவு முடிந்தவுடன் இதில் யாரை நடிக்க வைப்பது இயக்க வைப்பது உள்ளிட்ட பணிகளை கவனிக்கவுள்ளனர்.

முன்னதாக, மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையையும் சித்தாரா எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தான் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.